சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ள டிடி மற்றும் பிரியதர்ஷினி – 90ஸ் கிட்ஸ்க்கு கண்டிப்பா தெரியும்.

0
1758
dd
- Advertisement -

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் டிடி தான் பல ஆண்டுகளாக விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். சொல்லப்போனால் விஜய் தொலைக்காட்சியில் டிடி தான் சீனியர் தொகுப்பாளினி என்றும் சொல்லாம். டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் பெற்று இருந்தார்.

-விளம்பரம்-

நடிகை டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளையும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். திவ்யதர்ஷினி குறும்புத்தனமும், சுட்டித்தனமும் கொண்டவர்.

இதையும் பாருங்க : 4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.

- Advertisement -

இவருடைய நகைச்சுவையான, துள்ளலான பேச்சு அனைவருக்கும் தெரிந்தது தான். அதுமட்டும் இல்லாமல் திவ்யதர்ஷினியின் பேச்சால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார். மேலும், இவருடைய சகோதரி பிரியதர்ஷினி ஆவார். இவரும் ஒரு சிறந்த தொகுப்பாளினியும் ஆவர்.

மேலும், இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிரியதர்ஷினி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். டிடி பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், தனது அக்காவுடன் ஒரே ஒரு சீரியலில் நடித்துள்ளார். அது வேறு எந்த சீரியலும் இல்லை. சன் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கோலங்கள் சீரியல் தான். அந்த புகைப்படம் இதோ.

-விளம்பரம்-
Advertisement