இரவு பார்ட்டியில் தெலுங்கு நடிகருடன் குடி போதையில் டிடி உல்லாச நடனமா ? பத்திரிக்கையில் வெளியான ஷாக்கிங் புகைப்படம்.

0
22280
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளினிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு மிகவும் பெண் தொகுப்பாளினி யார் ? என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சொல்லிடுங்க. அந்த அளவிற்கு மக்களிடையே அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினி மட்டும் இல்லைங்க அவங்க அக்கா பிரியதர்ஷினி கூட ஒரு பிரபலமான தொகுப்பாளினி ஆவார்.டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லைங்க இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான தொகுப்பாளர் ஆவார். இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது.

இதையும் பாருங்க : காணாமல் போன மைக்ரோமேக்ஸ் நிறுவனம். அசின் கணவரின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

மேலும் ,ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்ம திவ்யதர்ஷினி தான் இருப்பார் என்று பேசப்படும் அளவிற்கு அவ்வளவு நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளார். மேலும், ஒரு நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை போரடிக்காமல் கொண்டு செல்லும் மந்திரத்தை திவ்யதர்ஷினிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். திவ்யதர்ஷினி எப்பவுமே நகைச்சுவையான தன்னுடைய துள்ளலான பேசினால் அனைவரையும் தன் பக்கம் இழுத்தவர்.

இப்படி டிடியை பற்றி பல்வேறு நல்ல விஷயங்கள் இருந்தாலும் அடிக்கடி டிடியை பற்றி சில சர்ச்சையான விஷயங்களும் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை டிடி பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் இரவு பார்ட்டியில் மது போதையில் உல்லாசமாக ஆட்டம் போட்டதாக பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் டிடி, ராணாவை கால்பந்து மைத்தனத்தில் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்யலாம் என விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தார்கள் பின்னர் உறுதியாக விவாகரத்தும் வாங்கினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

Advertisement