அப்பாகிட்ட சொல்லிட்டு 16 வயதிலேயே பார்டிக்கு சென்றேன்,ஆனால் அங்கே – டிடி சொன்ன பிளாஷ் பேக்

0
1099
DD
- Advertisement -

குடிப்பழக்கம் குறித்து வெளிப்படையாக டிடி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னெல்லாம் சினிமா உலகில் நடிகர்கள் தான் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பார்கள். அதுவே பெரிய சர்ச்சையாக எழுந்து உள்ளது. புகைப்பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைப்பதை முடிந்த வரை நீக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. ஏன் என்றால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் செய்யும் மாதிரியே செய்வார்கள். அதனால் தான் இதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

தற்போது சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் நடிகைகளும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கின்றனர். இது மிகப் பெரிய காட்சிகளில் அதிகம் வைக்கிறார்கள். அதிலும் படம் வெளியாகும் முன் அந்த புகைப்பிடிக்கும் காட்சிகள் வந்தால் போதும் சோசியல் மீடியாவில் அந்த படங்களை குறித்து தாறுமாறாக விமர்சனத்தை எழுதி விடுகிறார்கள். இவர்களுக்கு உண்மையாலுமே நிஜ வாழ்க்கையிலும் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ஆனால், இது குறித்த டாபிக் தான் தற்போது சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

டிடி அளித்த பேட்டி:

இந்த நிலையில் குடிப்பழக்கம் குறித்து வெளிப்படையாக டிடி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சமீபத்தில் டிடி பேட்டியில், நான் 16 வயதாக இருக்கும்போது கிளப்பில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று என்னுடைய அம்மாவிடம் கேட்டேன். ஆனால், அவர் ஒத்துக் கொள்ளவில்லை. பின் நான் என்னுடைய அப்பாவிடம் கேட்டேன். அவர் ஒத்துக் கொண்டார்.

மதுப்பழக்கம் குறித்து சொன்னது:

காரணம், நான் குடிக்க மாட்டேன் என்று அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் என்னை பார்ட்டிக்கு செல்ல அனுமதித்தார். தற்போது கூட என்னை சுற்றி பல பேர் மது குடித்தாலும் நான் குடிக்க மாட்டேன். கிளப்பில் நடக்கும் பார்ட்டிக்கு சென்றால் எல்லா பெண்களும் குடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் என்று டிடி கூறி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

-விளம்பரம்-

டிடி குறித்த தகவல்:

இவர் 21 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. மேலும், வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார்.

டிடி திருமணம்:

இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. பின் திவ்யதர்ஷினிக்கும் அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகு தான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள். அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண்ணாக திகழ்ந்து வருகிறார் டிடி.

Advertisement