வலியை பொருட்படுத்தாமல் டிடி சொன்ன ரம்ஜான் வாழ்த்து – ஏன்னு பார்த்தா நெகிழ்ந்து போவீர்கள்.

0
926
dd
- Advertisement -

முஸ்லீம் மக்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று முதல் துவங்கியது.கேரளா, ஜம்மு காஷ்மீரில் மட்டும் புனித ரமலான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.அதே போல கொரோனா வைரஸ், லாக்டவுன் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புனித ரமலான் நோன்பை சமூக விலகலுடன் கடைப்பிடித்த முஸ்லிம் மக்கள் நோன்பை முடித்தனர், மேலும், பல்வேறு பிரபலங்களும் அணைத்து முஸ்லீம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்தை தெரிவித்தனர்.

-விளம்பரம்-

மேலும், பிரபலங்கள் சிலரும் ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்த படி தொழுதுவிட்டு மக்களுக்கு வாழ்த்தை தெரிவித்தனர். ஆனால், பிரபல தொகுப்பாளினியான டிடி சொன்ன வாழ்த்து பலரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார்.

- Advertisement -

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் தந்து உள்ளார்கள். மேலும், டிடி அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (மே 25) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு டிடி, ஏ ஆர் ரஹ்மான் பாடல் ஒன்றை போட்டு அதற்கு உட்கார்ந்தபடியே நடனமாடி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

சரி, இதில் என்ன இருக்கிறது என்றால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் டிடியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் டிடி தனது காலில் கட்டுபோட்டு கொண்டு இருந்து வந்தார். ஆனால், நேற்று ரம்ஜான் வாழ்த்தை சொல்வதர்க்காக தனது காலில் அணிந்திருந்த கிளிப்பை கழட்டி, தனது கால் வலியை பொறுத்துக்கொண்டு ரம்ஜான் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாழ்த்தினை இந்த பாடலை போட்ட ஏ ஆர் ரஹ்மானுக்கு அர்பணித்துள்ளார் டிடி.

-விளம்பரம்-
Advertisement