வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்களுக்கு சமமாக சின்னத்திரையில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அதிக இடம் பிடித்தவர் டி.டி. என்கிற திவ்யதர்ஷினி. டி.டி.ன்னு சொன்னா தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? அந்த அளவிற்கு சின்னத்திரை நிகழ்ச்சியில் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமடைந்தார் டிடி. பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளையும் ஒரு கலக்கு கலக்குகிறார். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார். தற்போது அங்கேயே எம்ஃபில் படிப்பையும் முடித்து விட்டு பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். திவ்யதர்ஷினி அவர்களின் குறும்புத்தனமும், சுட்டித்தனமும், நகைச்சுவை கலந்த துள்ளலான பேச்சு உடையவர். இது அனைவருக்கும் தெரிந்தது தான். அதுமட்டும் இல்லாமல் திவ்யதர்ஷினி தன்னுடைய பேச்சால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20, ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி தொகுப்பாளர் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது டிடி மட்டும் தான். அந்த அளவிற்கு டிடி தொகுப்பாளர் பணியில் திறம்பட செயல்பட்டார். மேலும், இவருடைய சகோதரி பிரியதர்ஷினியும் தொகுப்பாளினியும் ஆவார். இவர் விசில், நள தமயந்தி, தனுஷின் ப.பாண்டி, சர்வம் தாளமயம்,துருவ நட்சத்திரம் என பல படங்களில் நடித்து உள்ளார்.
பொதுவாகவே சினிமா பிரபலங்கள் தனக்கு கிடைக்கும் நேரமெல்லாம் வெளியூர் சென்று பொழுது போக்குவது வழக்கமான ஒன்று. அப்படி சில நிகழ்ச்சிகளில் கமிட்டாகி பிஸியாக இருந்தாலும் டிடி திவ்யதர்ஷினி அவர்கள் கிடைக்கும் நேரத்தில் தற்போது இலங்கை சென்று உள்ளார். பின் அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் யார் செய்த வண்ணமே இருந்தார். இப்போது அவர் ஒரு புதிய வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோவில் ஒரு ரசிகை ஒருவர் டிடியை பார்த்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி அழுது உள்ளார். அதை பார்த்த டிடி அவரை கட்டியணைத்து, அவள் கண்ணிலிருந்து வரும் கண்ணீரை துடைத்து சமாதனப்படுத்தி ஆறுதல் சொன்னார். மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்து வைரலாகி வருகிறது.