முதன் முறையாக திருமண முறிவு குறித்து மனமுறுகி பேசிய டிடி திவ்யதர்ஷினி.

0
59205
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பெண் தொகுப்பாளினி யார் ? என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சொல்லிடுங்க. அந்த அளவிற்கு மக்களிடையே அதிகம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரது சிறப்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்திற்காக இவருக்கு பல முறை சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for dhivyadharshini husband

- Advertisement -

சின்னத்திரை மட்டுமல்லாது டிடி சினிமாவிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்கள் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான தொகுப்பாளர்என்றால் அது டிடி என்று கூட சொல்லலாம். . இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றது.

டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து பின்னர் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் டிடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் தனது திருமணம் முறிவு குறித்து மனமுறுக பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Image result for dhivyadharshini husband

அதில், நமது வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் கல்யாணமான பின்னர் அந்த உறவு கூட முடிந்து போகலாம் வேறு எந்த உறவு வேண்டுமானாலும் நம்மிடமிருந்து தள்ளிப் போகலாம் ஆனாலும் நாம் நம்முடைய வாழ்க்கையை வாழத்தான் வேண்டும் வழக்கம் போல காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு உங்கள் வேலைக்கு கிளம்பினார் உங்கள் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்று பேசியுள்ளார் டிடி

Advertisement