அடேங்கப்பா, டிடியின் அக்கா பிரியதர்ஷினிக்கு இவ்ளோ பெரிய மகனா – ஷாக்கான ரசிகர்கள்.

0
676
dd
- Advertisement -

தொகுப்பாளினி டிடி அக்கா மகனின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் அழைப்பார்கள். இவர் 23 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி.

-விளம்பரம்-

மேலும், டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். இவர் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது இவர் முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

திவ்யதர்ஷினி குறித்த தகவல்:

தற்போது இவர் காபி வித் காதல், துருவ நட்சத்திரம், ஜோசுவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதே போல இவர் travel பிரியர் என்பதால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார். அந்த வகையில் தற்போது இவர் இந்தோனேசியாவிற்கு தன்னுடைய அக்கா குடும்பத்துடன் வெகேஷன் சென்று இருக்கிறார். இவருடைய அக்கா வேற யாரும் இல்லைங்க, பிரியதர்ஷினி தான். இவரும் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர்.

பிரியதர்ஷினி குறித்த தகவல்:

இவர் தமிழ் திரை உலகில் தாவணிக் கனவுகள், இதயகோயில் மற்றும் மலையாள மொழி உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இவர் அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம் என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் சீரியல்:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்ற தொடரிலும் இவர் நடிக்கிறார். இதனிடையே பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார்.

பிரியதர்ஷினி மகன் புகைப்படம்:

இந்நிலையில் பிரியதர்ஷினி மகனின் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, டிடி அவர்கள் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் டிடி அருகில் இருந்த இளம் நபர் தான் பிரியதர்ஷினியின் மகன் ரிஷி. ரிஷியின் உடன் இருக்கும் மபுகைப்படத்தை தான் டிடி சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்றும், பார்க்க ஹீரோ மாதிரி இருக்காரு. இவர் படத்தில் நடிக்கப் போகிறாரா? என்றெல்லாம் கமெண்ட் கேட்டு வருகிறார்கள்.

Advertisement