மேடையிலும் உதயநிதி பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் கீழே அமர்ந்து இருப்பது எப்படி ? ‘விக்ரம் ஆடியோ லான்ச்சை சுதப்பிய விஜய் டிவி எடிட்டர்’

0
751
udhay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார். ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார்.

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை:

இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு விஷயங்களை பல பிரபலங்கள் பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

பா ரஞ்சித், கமலை வைத்து படம் இயக்குவது குறித்து பேசியிருந்தார். பின் உதயநிதி ஸ்டாலின் கமலை எல்லாம் யாரும் மிரட்ட முடியாது. இதில் அவர் ஒப்புதலுடன் தான் இந்த படத்தில் இணைந்து தயாரித்தோம் என்றெல்லாம் கூறியிருந்தார். அதேபோல் மேடையில் பேசிய சிம்பு அரசியல், சினிமா பற்றி பல விஷயங்களையும் பேசி இருந்தார். இப்படி நடந்த முடிந்த விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் விழா விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்திருந்தார்கள்.

நெட்டிசன்கள் கிண்டல் செய்ய காரணம்:

இந்த நிலையில் ஆடியோ லான்ச்சில் நடந்த ஒரு சின்ன மிஸ்டேக் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. அது என்னவென்றால், விக்ரம் படத்தின் ஆடியோ லாஞ்ச் போது உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியிருப்பார். அப்போது அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கீழே அவர் உட்கார்ந்து இருக்கும்படி காண்பிப்பார்கள். இதை விஜய் டிவி நிறுவனம் பார்க்காமல் எடிட் செய்து போட்டிருக்கிறார்கள். இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு உதயநிதி ஸ்டாலின் டபுள் ஆக்ஷனா? ஒரு சின்ன விஷயத்தை கூட எடிட் பண்ணும் போது பாக்க மாட்டீங்களா? என்றெல்லாம் விஜய் டீவியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement