விஜய்யின் ‘தளபதி 64’ படத்தில் இணைந்த விஜய் டிவி தொகுப்பாளினி. செம குஷியில் இருக்கார்.

0
4796
vijay-64
- Advertisement -

தென்னிந்திய சினிமாத் துறை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். மேலும்,விஜய் அவர்களின் பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், மக்களிடம் நல்ல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் நான்கு நாட்களிலேயே பிகில் படம் இரண்டு கோடியை வசூல் வேட்டையை பெற்றது என்று கூட சொல்லலாம். பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அவர்களின் நடிப்பில் “தளபதி 64” படம் தயாராகி வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த ரம்யா சுப்பிரமணியன் அவர்கள் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-
Image

இந்நிலையில் தளபதி 64 என்ற பெயரில் விஜயின் அடுத்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார். மேலும், இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என்றும் அறிவித்து உள்ளார்கள். விஜயின் நடிப்பில் வரும் தளபதி 64 படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் மொத்த நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம்.
மேலும், இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி தொடர்பாளரும், நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் நடிக்கிறார். மேலும், இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார். மேலும், தில்லியில் கடந்த 20 நாட்களாக தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் ரம்யா கலந்து கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக தங்களது செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ்-நிஷா ஜோடி.

- Advertisement -

அதோடு தில்லியில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் ரம்யா சுப்பிரமணியர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், திரைப்பட ஆடியோ லாஞ்ச், விருது வழங்கும் நிகழ்ச்சி என பல மேடைகளில் தொகுப்பாளராகவும் பணி புரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ரம்யா சுப்பிரமணியர் நிகழ்ச்சி தொகுப்பாளரை தாண்டி தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ரம்யா சுப்பிரமணியன் அவர்கள் அஜித்தின் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,வனமகன், கேம் ஓவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பயங்கர சர்ச்சையை உருவாக்கிய ஆடை படத்தில் நடிகை அமலா பாலுக்கு தோழி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா சுப்பிரமணியன் நடித்திருந்தார். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 64” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரம்யா கூறியது, ‘இது தான் எனது வாழ்க்கையில் மிக சந்தோசமான, உண்மையான தருணம். இப்படி ஒன்று நடப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், தளபதி விஜய்க்கும் மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement