விஜய் டீவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே போதும்.
அவர்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமி கதவை திறந்து விடுவார் போல.
விஜய் டீவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் நடிகர்களாகி திரைத்துறையை கலக்கிக்கொண்டு இருப்பவர்கள் சந்தானமும் சிவகார்த்திகேயனும்.
இவர்களில்லாமல் மேலும் பலர் விஜய் டீவி நிகழ்ச்சிகளின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர்களும் உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது புதிதாக இடம் பிடித்துள்ளவர் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலின்.
கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்பட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஜாக்குலின் இல்லை.
திடீரென்று எங்கே பறந்துவிட்டார் என்று நமது “BehindTalkies” குழு விசாரித்தில் அவர் சினிமாவில் நடித்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
சரி என்ன படத்தில் நடிக்கின்றார் என்ன வேடத்தில் நடிக்கின்றார் என்று நமது சினிமா நிருபர்கள் குழு விசாரித்ததில் சில ஆச்சரியமான தகவல்களும் கிடைத்தன.
அவர் நடித்து கொண்டிருக்கும் படத்தின் பெயர் கோலமாவு கோகிலா என்றும் அந்த படத்தில் நயன்தாராதான் கதாநாயகி என்பதும் தான் அந்த ஆச்சரியமான செய்தியே.
சரி கதாநாயகி நம்ம நயன்தாரா அப்படினா இவருக்கு என்ன வேடம் என்று விசாரித்ததில் நயன்தாராவுடன் படம் முழுக்க வரும் தோழி கேரக்டராம். கிட்டதட்ட கதாநாயகி-2 ஆக வலம்வருவாராம்.
சரி என்று இவ்வளவும் விசாரித்து முடித்து ஜாக்குலினிடமே இதைப்பற்றி கேட்டோம்.
ஆமாம் தன்போது சினாமாவில் தான் நடித்துக்கொண்டு இருக்கின்றேன் என்று கூறிய ஜாக்குலின் இனிமேல் டிவி பக்கம் வரமாட்டாரா என்று கேட்டால் இல்லை விரைவில் கலக்கப்போவது யாரு சீசன் 7 -ஐ நான் தொகுத்து வழங்க போகிறேன் என்கிறார் நம்மிடம்.
மேலும் பல படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் நம்ம ஜாக்குலின்.
ஜாக்குலினுக்கு நம்ம “BehindTalkies” சார்பாக வாழ்த்துகள்.