எவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு – இணையத்தில் கசிந்த ஆதாரத்தால் ஜாக்லினை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
4048
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு சிலர் தர்ஷா குப்தாவை திட்டி தீர்த்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தர்ஷா குப்தா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சினிமா நடிகைகளை விட சின்னத் திரை நடிகைகள் தான் ப்ரோமோஷன் என்ற பெயரில் சில பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பாதிக்கின்றனர்.

-விளம்பரம்-

ஒரு போஸ்டுக்கு இவ்வளவு ஒரு ஸ்டோரி இவ்வளவு இன்ஸ்டாவில் அந்த பொருட்கள் குறித்து வீடியோ போட இவ்வளவு என்று கணக்கிட்டு சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை பெறுகின்றனர். எந்த அளவிற்கும் போலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்த ப்ரோமோஷனுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.இப்படி ஒரு நிலையில் தர்ஷா குத்பா உட்பட விஜய் டிவி சீரியல் நடிகைகளான பவித்ரா, காவ்யா, சான்ட்ரா, ஆல்யா மானஸா என்று பல பிரபலமான நடிகைகள் சிறு தொழில் முனைவோரிடம் பொருட்களை விளம்பரம் செய்து தருவதாக பணத்தை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த பொருட்கள் குறித்து ப்ரொமோஷன் செய்யாமல் இருந்துள்ளனர் என்று சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இவரின் இந்த பதிவை தொடர்ந்து பல பிரபலங்களும் ப்ரோமோஷன் செய்வதர்க்காக பல மாதங்களுக்கு முன் வாங்கிய பணங்களை திருப்பி கொடுத்துள்ளனர். இதுவரை பிராண்டுகளுக்கு 4,50,000 ரூபாய் அப்படித் திருப்பித் தரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த சர்ச்சையில் அடுத்து சிக்கியுள்ளார் விஜய் டிவி ஜாக்லின். மற்றவர்களை போல இவரும் பணம் வாங்கிக்கொண்டு தனது இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வருகிறார். மற்றவர்களை போல இவரும் ப்ரோமோஷன் செய்து தருவதாக புடவை ஒன்றை வாங்கி இருக்கிறார். பல மாதங்கள் ஆகியும் போஸ்ட் போடாததால் இவருக்கு ப்ரோமோஷன் கொடுத்த நபர் ஏன் என்று கேட்க, அதற்கு ஜாக்லின் வாட் நான்சன்ஸ், அந்த புடவைக்கு நான் காச அனுப்பிடுறேன் என்று திமிராக பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement