நீங்களும் விஜய் டிவில தான இருக்கீங்க நீங்க எப்போ BMW வாங்க போறீங்க – ரசிகரின் கேள்விக்கு ஜாக்லின் அளித்த பதில்

0
1695
jack
- Advertisement -

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். அதுவும் மணிமேகலை, தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ் என்று பலர் BMW காரை வாங்கி இருந்தனர். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான ஜாக்லின் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.

-விளம்பரம்-

ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : வாழ்க்கைல நக கடைய கூட பாக்காத எனக்கு சூர்யா தம்பி இத்தன பவுன்ல செயின் போட்டுச்சு – உருக்கும் RARA பட லட்சுமி பாட்டி.

- Advertisement -

இவர் விஜய் டிவியில் நடித்து வந்த தேன்மொழி சீரியல் கூட சமீபத்தில் தான் நிறைவடைந்தது. சமீபத்தில் ஜாக்லின் புதிய Kia கார் ஒன்றை வாங்கி இருந்தார். இதுகுறித்து பதிவிட்டு இருந்தார் அவர், கார் என்பது சாதாரண பொருள் அல்ல, அது எங்களின் பல்வேறு உணர்வுகளை கண்டுள்ள இரண்டாம் வீடு. என தந்தை கார் ட்ரைவர் என்பதால் சிறு வயதில் நான் அதிகம் காரில் தான் இருப்பேன். இது எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபர்.

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டு இருந்தார். சமீபத்தில் ஜாக்லினிடம் இன்ஸ்டாவில் ஒரு ரசிகர் ‘அக்கா நீங்க இப்போ விஜய் டிவில இருக்கீங்க எப்போ Bmw கார் வாங்க போறீங்க’ என்று கேட்டிருந்தார் இதற்கு பதிலளித்த ஜாக்குலின் ‘அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது அப்படி பார்த்தால் நான் பல வருஷமா விஜய் டிவியில் தான் இருக்கேன் இப்போ தான் இந்த காரையே வாங்கி இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement