வாழ்க்கைல நக கடைய கூட பாக்காத எனக்கு சூர்யா தம்பி இத்தன பவுன்ல செயின் போட்டுச்சு – உருக்கும் RARA பட லட்சுமி பாட்டி.

0
5621
lakshmi
- Advertisement -

நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். எளிய கிராமத்து மனிதர்களின் பின்னணியில் இன்றைய அரசியலை விமர்சிக்கும் வகையாக இந்த படம் உள்ளது. இந்த படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் லட்சுமி பாட்டி. இவர் ஏற்கனவே ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்து இருந்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு என்ற ஒரு அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் தான். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த லட்சுமி பாட்டியிடம் பிரபல பத்திரிக்கை நிறுவனம் பேட்டி எடுத்திருந்தார்கள். அதில் லட்சுமி பாட்டி நடிகர் சூர்யா குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, என் சொந்த ஊரு கிழக்கே நரிக்குடி அந்த பக்கம் ஆவரங்குளம். அங்கு தான் முதன்முதலில் மிருகம் படத்திற்கு செட்டு போட்டு இருந்தாங்க. நானும் அங்கு வேலைக்கு போய் இருந்தேன். என்னோடு சேர்த்து 71 பேர் வேலைக்கு போய் இருந்தோம்.

இதையும் பாருங்க : கே டிவில பத்ரி படம் பாத்துட்டு இருக்கீங்களா ? அதுல சிறுத்தை சிவாவ நோட் பன்னீங்களா. இதோ அந்த காட்சி.

- Advertisement -

பின் படக்குழுவினர் 70 பேரை பார்த்து விட்டு கடைசியாக இருந்த என்னை பார்த்துநீங்கள் தான் படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதலில் நான் ஒத்துக்கொள்ளவில்லை. பின் படத்தில் நடித்தேன். நான் 15 வருஷமாக சினிமாவில் இருக்கிறேன். மிருகம், அயன், பில்லா, பாண்டி, மெர்சல், விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கேன். அதை தொடர்ந்து நான் 20,30 படத்துக்கு மேல நடித்து இருக்கேன். இப்ப சூர்யா தம்பி படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு. இதற்கு முன்னாடியே சூர்யா படத்தில் நடித்து இருக்கேன். சூர்யாவின் சூரரை போற்று படத்தில் விமானத்தில் பறக்கும் காட்சியில் நடித்தேன். பின் இந்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன்.

சூர்யா தம்பி என்னை பார்த்து நல்ல நல்ல நடித்து இருக்கேன் என்று சொல்லி இருந்தார். பின் அவர் எனக்காக 2 பவுன் செயின், போன் வாங்கி தந்து இருக்காரு. ஒரு நாள் சென்னையில் இருந்து சூர்யா தம்பி போன் போட்டு உங்களுக்கு தான் இந்த செயின், போன் எல்லாமே என்று சொன்னார். அவர் எனக்கு கொடுத்ததற்காக இல்லை. அவங்க குடும்பமே ரொம்ப நல்லா இருக்கணும். என் உயிர் உள்ளவரைக்கும் அவரை நான் மறக்க மாட்டேன். சூர்யாவை எப்போதும் என் பேரனாக தான் நினைக்கிறன். நான் நகைக்கடை வாசல் பக்கம் கூட சென்றது இல்லை. நைட் நான் இவ்வளவு கஷ்ட்டப்பட்டத்துக்காக எனக்கு ஆண்டவன் சூர்யா மூலம் ஒரு வரம் கொடுத்து இருக்காரு. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று உணர்வுப்பூர்வமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
Advertisement