என் அப்பா கார் ட்ரைவர், அதனால் சிறு வயதில் – புதிய கார் வாங்கிய ஜாக்லினின் உருக்கமான பதிவு.

0
2951
jack
- Advertisement -

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான ஜாக்லின் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.

-விளம்பரம்-

ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : முக்கிய சீரியலில் இருந்து வெளியேறிய ரிஷி கேஷவ் – இனி அவருக்கு பதில் இவர் தான்

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி தொடரில் நடித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் ஜாக்லின், தனது அம்மா மற்றும் தோழியுடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், கார் என்பது சாதாரண பொருள் அல்ல, அது எங்களின் பல்வேறு உணர்வுகளை கண்டுள்ள இரண்டாம் வீடு. என தந்தை கார் ட்ரைவர் என்பதால் சிறு வயதில் நான் அதிகம் காரில் தான் இருப்பேன். இது எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபர். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement