‘நான் நாய் தான். உங்களுக்கு பிரச்சனை என்றால் ‘ – கமண்டுகளால் கடுப்பான ஜாக்லின்.

0
27849
jackline
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.தற்போது இவர் தேன்மொழி BA ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

ஜாக்லினுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும், தனது வீட்டில் கூட சில நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். ஆனால், கடந்த சில காலமாகவே இவர் நாய் வளர்த்து வருவதால் சமூக வலைதளத்திலும் அக்கம்பக்கத்தினராலும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளார் ஜாக்லின். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவு(status) ஒன்றை செய்துள்ளார் ஜாக்லின், அதில் நான் நாய்கள் குறித்து பதிவிட்ட பகுதிகளில் எனக்கு, நாய் விக்கிற, வழியில் நாம நாய் கூட இருக்க, நீயும் ஒரு நாய் போன்ற பல்வேறு விதமான விமர்சனங்கள் வருகிறது.

ஆமாம், எனக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். நாய் புத்தி தானே நாய்க்கு வரும்னு கூட சொல்லுங்க அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. பைத்தியம் பிடித்த மனிதர்களாக இருப்பதை விட நாயாக இருப்பதே மேல். நான் என்னுடைய நாய்கள் குறித்து பதிவிடுவேன். அது உங்களுக்கு பிரச்சினை என்றால் தயவுசெய்து கிளம்பி விடுங்கள் அல்லது ஒரு சில முட்டாள்கள் குறைப்பது போல நீங்களும் குறையுங்கள். முதலில் வாயில்லா ஜீவன்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஜாக்லின்.

-விளம்பரம்-

ஏற்கனவே நடிகை ஜாக்லின் ரோட்டில் உள்ள நாய்க்கு தனது வீட்டின் வாசலில் உணவை வைத்த போது ஜாக்லின் வீட்டில் இருந்த நாய் குலைத்துள்ளது. அப்போது ஜாக்லின் வீட்டின் பக்கத்தில் இருந்த நபர் ஒருவர், ‘வீடுபுகுந்து சாத்திடுவேன் கிறிஸ்டியன் பொண்ணு விடுறேன்’ என்று திட்டியதாக ஜாக்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement