விஜய்யின் இசை வெளியிட்டு விழாவை ஒருங்கிணைப்பு செய்தது இந்த கனா காணும் சீரியல் நடிகர் தானா.

0
46299
master
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். விஜய் படம் என்றாலே ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. எப்போதுமே தளபதி விஜயின் படத்தை விட இசை வெளியீட்டு விழாவில் தான் பயங்கர சர்ச்சை இருக்கும்.

-விளம்பரம்-

அதே போல் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தும் இது குறித்த சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் உள்ளன. விஜய் அவர்கள் இசை வெளியிட்டு விழாவில் அரசியல் குறித்து பேசவில்லை என்றாலும் புதியதாக வதந்திகளை கிளப்பி உள்ளார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியது யார் என்று தெரியும். ஆனால், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தவர் யார் தெரியுமா? அவர் கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் பிராங்க்ளின் தான். இவரை அனைவரும் அப்பு என்று தான் செல்லமாக அழைப்பார்கள்.

- Advertisement -

இவர் சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, ஈரமான ரோஜாவே போன்ற பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஒருங்கிணைப்பாளராக அதாவது நிகழ்ச்சியில் யார் பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? எப்படி பேசணும்? நிகழ்ச்சியை எப்படி நடத்தணும்? என அனைத்து கன்டென்ட்டுகளையும் எழுதி தரவராக உள்ளார் நடிகர் பிராங்கிளின்.

மேலும்,விஜயின் பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழாவையும் இவர் தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் பிராங்கிளின் அவர்கள் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பணியாற்றிய அனுபவத்தை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியது, இந்த இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய பங்கு மட்டும் இல்லை. நாங்கள் ஒரு குழுவாக சேர்ந்து செய்தோம். இந்த இசை வெளியீட்டு விழாவுக்காக நாங்கள் 30 நாட்கள் வேலை செய்தோம்.

-விளம்பரம்-

முதல்ல நாங்க ஒவ்வொரு நபருக்கும் கேள்வி தயார் பண்ணி வைத்திருப்போம். இந்த கேள்வி யாரிடம் கேட்க வேண்டும், யார் மேடையில் பேச வேண்டும்? இவர்கள் அடுத்து யார் யார் பேச வேண்டும்? என்று எல்லாமே ஒரு பிளான் பண்ணி வைத்திடுவோம். சங்கீதா விஜய் மேம் எப்பவுமே ஷார்ட் அண்ட் லிமிட் தான் பேசுவாங்க. அவர்கள் வந்து பேசுவாங்க என்று நாங்க எந்த ஒரு பிளானும் பண்ணல. எங்க கிட்ட அவங்க பேசுவது பற்றியும் சொல்லவில்லை.

யார் பேசுவாங்கன்னு சொல்றாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் கண்டெண்ட் ரெடி பண்ணி வைப்போம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முதலில் பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்களை தான் நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதில் வெங்கட் பிரபு இடம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று கேட்டதற்கு அவரும் சரி என்று சொன்னார். ஆனால், சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பிசியாக நடந்து கொண்டு இருப்பதால் அவரால் வர முடியாமல் போனது. இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு சிம்ரன் மேம் இடம் கேட்டோம். நாங்கள் மாஸ்டர் படத்தில் நடனம் ஆட வேண்டும் என்று கேட்டவுடன் சிம்ரன் மேம் ஓகே பண்ணிடலாம் என்று சொன்னாங்க. அவங்க நடனமாடி இருந்தது எல்லா ரசிகர்களுக்கும் பயங்கர குஷி என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நடிகர் பிராங்கிளின்.

Advertisement