சின்னத்திரையில் பிரபலம் ஆனவர்களில் நடிகை மைனாவும் ஒருவர். இவரது உண்மையான பெயர் நந்தினி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ‘மைனா’ என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார்.இதனால் இவருக்கு மைனா என்ற பெயர் இவருக்கு வந்தது.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பவர் ‘மைனா’ நந்தினி’. டிக்டாக்கில் இவரை ஒரு மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் இவருக்கென தனி ஆர்மியே உள்ளது. திடீரென இவ்வளவு பொலிவு எப்படி சாத்தியமாச்சு என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள அவர், டிக்டாக் பொழுதுபோக்குக்காக பண்ற விஷயம்தான். நடிக்கிறது நமக்குப் பிடிச்ச விஷயம். ஒரு மில்லியன் பேர் என்னைப் ஃபாலோ பண்றாங்கங்குறது நிஜமாகவே எனக்குப் பெரிய விஷயம். ஃப்ரீ டைம் கிடைச்சா இப்போலாம் என்னுடைய பொழுதுபோக்கே டிக்டாக் வீடியோ பண்றதுதான்.
மீடியாவுக்காக சில விஷயங்களை நாம செய்ய வேண்டியிருக்கும். உண்மையைச் சொல்லணும்னா இப்போ வரைக்கும் என் காருக்கு நான் டியூ கட்டிட்டுதான் இருக்கேன். பெரிய பணக்காரியாகணுங்குற ஆசையெல்லாம் இல்லங்க. இன்னைக்கு வாழுற வாழ்க்கையைச் சந்தோஷமா வாழணும் அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.