கைது செய்யப்பட்ட நாஞ்சில் விஜயன் – சூர்யா தேவி கொடுத்த புகாரால் வந்த ஆப்பு.

0
446
- Advertisement -

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைதாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன்.

-விளம்பரம்-
nanjil

பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

நாஞ்சில் விஜயன் சின்னத்திரை பயணம்:

இந்த சீரியலின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று இருக்கிறார். வத்திக்குச்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நாஞ்சில் விஜயன் நடித்து இருக்கிறார். இப்படி சின்னத்திரையில் படு பிசியாக கலக்கிக் கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயன் சமீபத்தில் புது கார் ஒன்று வாங்கி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துக்களை கூறி லைக்குகளை குவித்து இருந்தார்கள்.

வனிதா குறித்த சர்ச்சை:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாக பேசியிருந்தார். இதனால் வனிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சூர்யா தேவியை கைது செய்திருந்தார்கள். பின் சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியிருந்ததாக நாஞ்சில் விஜயன் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்திலும் நாஞ்சில் விஜயன் வழக்கு பதிவு செய்திருந்தார்.

-விளம்பரம்-

சூர்யா தேவி அளித்த புகார்:

இதனை அடுத்து சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் குறித்து புகார் அளித்து இருந்தார். அதில் அவர், நானும் நாஞ்சில் விஜயனும் ஏறத்தாழ ஆறு வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். வனிதாவிற்கு எதிராக youtubeல் கருத்து பதிவிட்ட போது எனக்கு நாஞ்சில் விஜயின் ஆதரவாக இருந்தார். பின் திடீரென அவர் வனிதாவுடன் சமரசமாக பேசிக் கொண்டார். இதை குறித்து கேட்க நான் நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றேன். அவர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டு கட்டையால் அடித்தார்.

கைதான நாஞ்சில் விஜயன்:

இதில் என்னுடைய மண்டை உடைந்தது என்று சூர்யா தேவி நாஞ்சில் விஜயின் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் விஜயின் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும் நாஞ்சில் விஜயன் முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் நாஞ்சில் விஜயனை கைது செய்து வளசரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக நாஞ்சில் விஜயன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement