விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். பின் இவர் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியானாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும், பெரும்பாலும் இவர் நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். லேடிஸ் நாஞ்சில் விஜயனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் கூட நடித்திருந்தார். அதன் பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட ‘வள்ளி திருமணம்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாஞ்சில் விஜயன் நடித்திருந்தார்.
நாஞ்சில் விஜயன் குறித்த தகவல்:
அதன் பின் இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதிலும் இவர் சில குறும்படங்களில் கூட நடித்து இருந்தார். இதனிடையே நாஞ்சில் விஜயன், மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நாஞ்சில் திருமணம்:
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாஞ்சில் விஜயன் தன்னுடைய திருமண வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இவரின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அதன் பின் சமீபத்தில் விஜய் டிவியில் முடிந்த ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் கோமாளியாக நாஞ்சில் விஜயன் கலந்து இருந்தார். கோமாளியாக நிகழ்ச்சி தொடங்கிய சில வாரத்திலேயே இவர் வெளியேறி விட்டார்.

நாஞ்சில் விஜயன் மனைவி கர்ப்பம்:
அதன்பின் இவர் தன்னுடைய மனைவி மரியாவுடன் சேர்ந்து Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன் நாஞ்சில் விஜயன், தன் மனைவி மரியா கர்ப்பமாக இருக்கும் செய்தியை வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அதன்பின் சமீபத்தில் நாஞ்சில் விஜயன் தன்னுடைய மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பை நடத்தி இருந்தார். அதில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள்.
View this post on Instagram
நாஞ்சில் விஜயன் குழந்தை:
அதன்பின் இவர்கள் இருவருமே பிரக்னன்சி போட்டோ சூட்டுகளை நடத்தி இருந்தார்கள். அதில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பகிர்ந்து வந்தார்கள். இந்த நிலையில் நாஞ்சில் விஜயனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தன் மகளை கையில் ஏந்தியவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார் நாஞ்சில் விஜயன். தற்போது இது தொடர்பான புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






