ரயிலில் பாத்ரூம் அருகில் அமர்ந்து சென்னைக்கு வந்தேன், ஆனால் இப்போ – விஜய் டிவி நாஞ்சில் விஜயன்

0
512
nanjil
- Advertisement -

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் புது கார் வாங்கி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புது புது வித்தியாசமான கான்செப்ட்டில் விஜய் டிவி பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறது. நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இருந்தாலும் அதன் மூலம் இவர் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

நாஞ்சில் விஜயன் பற்றிய தகவல்:

இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இடையில் நாஞ்சில் விஜயன் குறித்து பல்வேறு சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. அதனால் இவர் பிரேக் கொஞ்சம் எடுத்து கொண்டு இருந்தார். மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வள்ளி திருமணம் சீரியல்:

இந்த சீரியலின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று வருகிறார். இப்படி சின்னத்திரையில் படு பிசியாக நாஞ்சில் விஜயன் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் புது கார் ஒன்று வாங்கி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நாஞ்சில் விஜயன் வாங்கிய புது கார்:

சமீப காலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் பலரும் புது கார் வாங்கி அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் பலர் புது கார் வாங்கி இருக்கிறார்கள். சித்து ஸ்ரேயா, மணிமேகலை, சரண்யா, கேப்ரிலா உட்பட பல பிரபலங்கள் புதிய கார் வாங்கி இருந்தார்கள். தற்போது இந்த வரிசையில் நாஞ்சில் விஜயனும் இணைந்திருக்கிறார். இவர் புது கார் ஒன்றை வாங்கி அதனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

இன்ஸ்டாவில் நாஞ்சில் விஜயன் கூறியது:

பெரிய கனவுடன் சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வரும்போது நான் ரயிலில் பாத்ரூம் அருகில் அமர்ந்து வந்தேன். அது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. தற்போது இப்படி வளர்ந்து இருப்பது எனக்கு கனவு நினைவானது போல இருக்கிறது. எதுவும் முடியாதது இல்லை. உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் தேவை மக்களே! என்று அ பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட புகைப்படமும், பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துக்களை கூறி லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement