விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்னும் காமெடி நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நவீன் , ஏற்கனவே திருமணமான நவீன் இரண்டாம் திருமணம் செய்விருந்ததால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானார்.
கடந்த கடந்த 2016 ஆம் ஆண்டு திவ்யலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களாக மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்த நவீன் கடந்த ஜூன் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொளவிருந்த நிலையில், நவீனின் முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் ஜாமினில் இருந்து வெளிவந்த நவீன் தனது முதல் மனைவி திவ்யலட்சுமியை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்.
ஆனால், தனது காதலியான கிருஷ்ணகுமாரியுடன் இருந்து வரும் நவீன் அடிக்கடி கிருஷ்ணகுமாரியுடன் இணைந்து டப்ஸ்மாஷ், முயூசிக்கலி செய்து அந்த விடீயோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.