ஆபீஸ் சீரியல் நடிகையை நினைவிருக்கிறதா ? திருமணத்திற்கு பின் எப்படி ஆகிட்டார் பாருங்க.

0
4294
Madhumila
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ஆபீஸ் தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. கனா காணும் காலங்கள் தொடர் நிகழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த சீரியலின் மூலம் பல்வேறு சின்னத்திரை நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள்.அவ்வளவு ஏன், தற்போது செம்பருத்தி தொடரில் நடித்து வரும் கார்த்திக்கும், ஆபீஸ் கார்த்தி என்று பெயரை எடுத்தது இந்த தொடர் மூலம் தான். இதே தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை மதுமிளா.

-விளம்பரம்-

இந்த தொடருக்கு முன்பாகவே இவர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் இருந்து வந்தார். அதன் பின்னர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். ஆபிஸ் தொடருக்கு பின்னர் தாயுமானவன், அக்னி பறவை போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.இவரது சிறப்பான நடிப்பாலும் அழகான தோற்றத்திலும் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

இவர் முதன் முதலில் விஷால் நடித்த பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியலிலும் சரி, சினிமாவிலும் சரி குடும்ப பங்காக நடித்த இவர், நிஜத்தில் படு மாடர்ன் மங்கையாக இருந்து வருகிறார். அதே போல திருமணத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.

திருமணத்திற்கு பின்னர் இவர் முன்பை விட உடல் எடை கூடி கொஞ்சம் பப்லியாக மாறிவிட்டார். மேலும், திருமணத்திற்கு பின்னர் இவர்க்கு ஒரு மகளும் பிறந்துள்ளார். அவருடைய பெயர் ஸுவ்ஸா. சமீபத்தில் தான் மதுமிதாலாவின் மகள் பிறந்து 6 மாதம் ஆகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் மதுமிதா தனது கணவருடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement