பொள்ளாச்சி சம்பவம் குறித்து ட்வீட் செய்த விஜய் டிவி.! கழுவி ஊற்றிய ட்விட்டர்வாசிகள்.! ஏன் ?

0
740
Vijay-Tv

தமிழ்நாட்டின் பொள்ளாச்சி மாவட்டத்தில் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தல் கொடூரமான வழக்கு தொடர்பாக நான்கு பேரைக் கைது செய்தனர் போலீசார். தற்போது இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) மற்றும் தாக்குதல் (354 பி) ஆகியவற்றுடன் சேர்த்து ஐபிசி பிரிவின் கீழ் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2000 ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகளிலும் மற்றும் பெண்களின் மனிதாபிமான சட்டத்தின் தமிழ்நாடு தடைவிதிப்புகளிலும் அவை பதிவு செய்யப்பட்டன.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி கொடூர சம்பவம்.! நீண்ட மாதத்திற்கு பின் லைவில் வந்த சன் டிவி சீரியல் நடிகை.! 

- Advertisement -

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், பல்வேறு நடிகர், நடிகைகளும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களையும் கண்டனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்ற நிலையில் விஜய் டிவி நேற்று தான் இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்தது.

நேற்று மாலை விஜய் டிவியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், மனசு வலிக்குது என்று பதிவிட்டுள்ளது. அதனை கண்ட பல ட்விட்டர் வாசிகளும் நாட்டையே உலுக்கிய சம்பத்திற்கு இரண்டு நாள் கழித்தா வருத்தம் தெரிவிப்பது என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement