50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்டி லவ் செட்டாச்சினு- நிஷாவை கிண்டல் செய்த பிரியங்கா. கழுவி ஊற்றிய ரசிகர்களால் வீடீயோவை நீக்கிய பிரியங்கா.

0
13354
nisha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் இருக்கும் எத்தனையோ பெண் தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். இவர் சூப்பர் சிங்கர் துவங்கி கலக்கப்போவது யாரு வரை விஜய்டிவியின் எத்தனையோ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். பிரியங்கா நடுவராக பங்குபெற்ற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாராக கலந்து கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு வருபவர் தீனா. சமீபத்தில் இவர்கள் இருவரும் கலக்கப்போவது யாரு நிஷாவை நிற கேலி செய்ததால் நெட்டிசன்கள் கோபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கேமராவை பிடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா, தீனாவிடம் ‘காதலுக்கு ஏன் கண்ணில்லை என்று சொல்லுகிறார்கள்’ என்று கேட்டதும் அது உண்மைதான் என்று நிஷா பக்கத்தில் கேமராவை திருப்பிய தீனா ‘இதுக்கெல்லாம் காதல் கல்யாணம் நடந்தா காதலுக்கு கண் இல்லை என்று தானே அர்த்தம்’ என்று கூறுகிறார் அதற்கு பிரியங்கா சீனாவிற்கு கைகொடுத்து நீ சொல்வது கண்டிப்பாக சரி, சாரி என்று கூறியிருந்தார்.

- Advertisement -

நிஷாவை கலைப்பதாக நினைத்து வேடிக்கையாக இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பிரியங்கா. ஆனால், இந்த வீடியோவை கண்டு பிரியங்கா மற்றும் தீனாவை பலரும் விமர்சித்து துவங்கிவிட்டார்கள். நிஷாவின் நிறத்தையும் அவரது உருவத்தையும் கேலிசெய்து இப்படி வீடியோ வெளியிட்டது மிகவும் கேவலமாக இருக்கிறது என்று தீனா மற்றும் பிரியங்காவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

மேலும், ரசிகர் ஒருவர், 50கிலோ அரிசு மூட்டை மாதிரி இருக்க உனக்கு எப்டி லவ் செட்டாச்சினு திரும்ப கேட்டுற போறாங்க அக்கா. இதையெல்லாம் இனி காமெடினு பண்ணிட்டு திரியாதீங்க. டேய் தீனா என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரா, அப்ப கருப்பா இருக்க பொண்ணுங்க காதலிக்கவே கூடாதா சில்லறைகளா என்று கமன்ட் செய்து உள்ளார். ரசிகர்கள் திட்டித் தீர்த்தத்தால் அந்த வீடியோவையே நீக்கிவிட்டார் பிரியங்கா.

-விளம்பரம்-

இருப்பினும் பிரியங்கா மற்றும் தீனாவை நெட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற தீனா , பா பாண்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து கைதி படத்தில் நடித்த தீனா , தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement