நான் பிக் பாஸ் போனது தப்போன்னு நெனச்சேன் ? கண் கலங்கி தொகுப்பாளினி பிரியங்கா பதிவிட்ட வீடியோ.

0
667
priyanka
- Advertisement -

மலேசியா மக்கள் குறித்து மிக எமோஷனலாக தொகுப்பாளினி பிரியங்கா பதிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான்.

-விளம்பரம்-

அதோடு இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும், விஜய் டிவி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

பிரியங்கா பற்றிய தகவல்:

இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்பு குழுவில் பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரியங்கா திருமணத்திற்க்கு பிறகும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாகியாக தொகுத்து வழங்கியது மட்டும் இல்லாமல் நடுவராகவும் பங்கு பெற்று இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா:

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5ல் ப்ரியங்கா கலந்து கொண்டு இருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் மிகத் திறமையாக விளையாடி இருந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார் என்றே சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் தன்னுடைய தொகுப்பாளினி வேலையை தொடங்கி விட்டார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரியங்கா:

மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். அதில் அவர் செய்யும் காமெடி, குறும்பு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்கள். இதனால் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செகிறார்கள். தற்போது பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் மலேசியா மக்கள் குறித்து தொகுப்பாளினி பிரியங்கா பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் பிரியங்கா அவர்கள் மலேசியா சென்றிருந்தார். அந்த நாட்டு மக்கள் அவரை அன்பாக வரவழைத்து புகைப்படம் எல்லாம் எடுத்திருந்தார்கள்.

பிரியங்கா பதிவிட்ட வீடியோ:

இந்நிலையில் இது குறித்து பிரியங்கா வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், மலேசியா மக்கள் காட்டிய அன்பால் நான் நெகிழ்ந்து போனேன். அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? எதற்காக அவர்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்? என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதே தவறு என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தது மலேசியா மக்கள் தான் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். என்னை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடியிருந்தார்கள். என்னை பார்த்ததும் அவர்கள் கையசைத்தது, எனக்கு வாழ்த்து தெரிவித்தது எல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. மலேசியா மக்களுக்கு ரொம்ப நன்றி என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்.

Advertisement