அதர்வா, ராஜ்கிரண் நடித்துள்ள ‘பட்டத்து அரசன்’ – முழு விமர்சனம் இதோ.

0
952
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அதர்வா. தற்போது அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பட்டத்து அரசன். இயக்குனர் சற்குணம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரன், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் அதர்வாவின் பட்டத்து அரசன் படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

காளையர் கோவில் என்னும் ஊரில் சிறந்த கபடி ஆட்டக்காரராக பெயர் பெற்று இருக்கிறார் ராஜ்கிரன். இவர் மகன், மகள், பேரன், பேத்தி என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியும், அவருடைய மகனும் இறந்து விடுகிறார். அவருடைய மருமகள் தான் ராதிகா. ராதிகாவின் மகன் தான் அதர்வா. பழைய குடும்பத்து சண்டையினால் ராதிகா, அதர்வா தனியாக வசித்து வருகிறார்கள். எப்படியாவது குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று அதர்வா போராடுகிறார்.

- Advertisement -

ஆனால், அதர்வாவை ஏற்க ராஜ்கிரனின் மொத்த குடும்பமும் மறுக்கின்றது. அப்போது யாராலும் தோற்கடிக்க முடியாத அரச குலம் என்ற ஊரை கபடி போட்டியில் தோற்கடித்ததால் ஊராட்சி மன்ற தலைவரை விட ராஜ்கிரனுக்கு ஊரில் அதிகம் மரியாதை கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் மூன்று தலைமுறைகளும் கபடி போட்டியில் ராஜ்கிரண் கொடிகட்டி பறக்கிறார். இது ஊர் பிரசிடெண்ட் ஆக இருக்கும் அவருடைய நண்பருக்கு பிடிக்காமல் போகிறது.

மேலும், பழைய பிரச்சனையின் காரணமாக அதர்வா மற்றும் அவருடைய அம்மா ராதிகாவை மட்டும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைக்கிறார் ராஜ்கிரண். அப்போது ராஜ்கிரணின் பேரன் செல்லையாவிற்கு புரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இது ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சடகோமனுக்கு பிடிக்காமல் போகிறது. பின் தாத்தாவுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி ராஜ்குமாரின் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அளவிற்கு செய்து விடுகிறான். ப்ரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பு செல்லையா இழக்கிறான்.

-விளம்பரம்-

இதனால் மனமுடைந்து செல்லையா தற்கொலை செய்து கொள்கிறார். இதனை அடுத்து தன்னுடைய தம்பி அப்பாவி என்று நிரூபிக்க ஊரை எதிர்த்து தன்னுடைய குடும்பமே கபடி போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என்று சவால் விடுகிறார் அதர்வா. ஆனால், அதர்வாவிற்கு கபடி விளையாட தெரியாது. இறுதியில் ராஜ்குமாரின் குடும்பம் கபடியில் வென்றதா? வில்லன்களுடைய முகத்திரையை கிழித்தார்களா? ஊர்மக்கள் ராஜ்குமாரின் குடும்பத்தை ஏற்றுக் கொண்டதா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

படத்தில் ராஜ்கிரண் தன்னுடைய அனுபவ நடிப்பை அழகாக காண்பித்திருக்கிறார். அதிலும் கபடி விளையாட்டின் போது அவருடைய ஒவ்வொரு காட்சியும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. இவரை அடுத்து ஹீரோவாக வரும் அதர்வா தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் அருமையாக செய்திருக்கிறார். ஆனால், படத்தில் ஹீரோயினிக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

படத்தின் ஆரம்பத்தில் எமோஷனல், சென்டிமென்ட் காட்சிகளிலேயே வைத்திருந்ததால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது என்று சொல்லலாம். கொஞ்சம் காமெடி, சண்டையும் அதிகமாக வைத்திருந்தால் இன்னும் கதைகளம் விறுவிறுப்பாக சென்றிருக்கும். ஆனால், இரண்டாம் பாதி ஆட்டம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். ஜிப்ரான் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தது. ஆனால், பாடல்கள் எதுவும் பெரிதாக செட்டாகவில்லை. பல எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

ராஜ்கிரன், அதர்வா நடிப்பு சிறப்பு.

கபடி விளையாட்டை மையமான கதை.

குடும்ப கதை,

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக உள்ளது.

கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.

குறை:

படம் செண்டிமெண்டிலே செல்வது போல இருக்கிறது.

கொஞ்சம் ஆக்ஷன், அடிதடி காண்பித்து இருந்தால் ஆட்டம் சூடு பிடித்திருக்கும்.

காமெடிகள் எல்லாம் படத்திற்கு செட் ஆகவில்லை.

பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை.

முதல் பாதி சலிப்பை தட்டி இருக்கிறது.

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் பட்டத்து அரசன் – மகுடம் சூடவில்லை

Advertisement