வேலைக்காரன் சீரியலால் அடுத்த சீரியலுக்கு என்ட் கார்டு போட்ட விஜய் டிவி.

0
2231
velaikaran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது.

-விளம்பரம்-
விஜய் டிவியில் இந்த சீரியலுக்கு என்ட் கார்டு போட்டாச்சு

அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது. அதே போல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி இருந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் புதிதாக துவங்கப்பட இருக்கும் புதிய தொடரான ‘வேலைக்காரன்’ சீரியலுக்காக தனது அடுத்த சீரியலை நிறுத்தியுள்ளது விஜய் டிவி. விஜய் டிவி இன்று (டிசம்பர் 7) முதல் ‘வேலைக்காரன்’ என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ள இத்தொடரில் சோனா நாயர் (விசாலாட்சி), சபரி (வேலன்), கோமதி பிரியா (வள்ளி), சத்யா (ராகவன்), வாசு விக்ரம் (சிங்கபெருமாள்) மற்றும் நிஹாரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த தொடரின் டீசரை பார்க்கும் போது இந்த தொடர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘முத்து படத்தின் ரீ -மேக் போலத்தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில்  கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த  ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ சீரியல் முடிவடைந்திருப்பதாக அத்தொடரின் நடிகர்கள் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ தொடரின் பயணத்தை மறக்கமுடியாது என்றும், அந்த நாட்கள் தங்களுக்கு திரும்ப கிடைக்காது என்றும் அத்தொடரில் நடித்த நடிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement