ப்ளீஸ் இத பண்ணாதீங்க, டிஆர்பி மோசமா அடிவாங்குது – ராஜ பார்வை சீரியல் நடிகர் வேண்டுகோள்.

0
2261
rajapaarvai
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அதே போல barcindia என்ற வலைதளத்தில் வாரம் தோறும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வரும் டிவி நிகழ்ச்சிகளில் TRP ரேட்டிங் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர் . இதில் சமீப காலமாக விஜய் டிவியின் சீரியல்கள் முதல் இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜ பார்வை சீரியல் நடிகர் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்ட சீரியல் ‘ராஜ பார்வை’ ஆனந்த் என்ற பணக்கார வீட்டு இளைஞன் ஒரு விபத்துக்குப் பிறகு பார்வை இழக்கிறான். தனது முத்தமகனின் மகனின் விபத்திற்கு இரண்டாவது மகனான அரவிந்த் தான் கரணம் என அவன் மீது கோபமும் வெறுப்பும் காட்டும் தாய் மகாலட்சுமி. ஆனால் அண்ணன் தம்பி இருவரும் மிகவும் பாசமானவர்கள் ஒரு நாள் கூட தம்பியை பிரியாத ஆனந்த். இப்படி இவர்கள் வாழ்க்கை சென்றுகொண்டு இருக்கும் தரு வாயில் சாரு என்ற நடுத்தர குடும்பத்து பெண் மீது காதல் கொள்ளும் ஆனந்த். இவனின் வாழ்வில் சாரு வந்த பிறகு நடக்கும் மௌனம் சார்ந்த காதல் கதை தான் இந்த தொடர்.

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நாயகனாக நடிக்கும் முன்னா ரஹ்மான் சமீபித்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், “ராஜ பார்வை சீரியல் ரசிகர்களுக்கும், ஃபேன் பேஜ் அட்மின்களுக்கும் என் வேண்டுகோள். சீரியல் எபிசோடின் வீடியோ க்ளிப்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடாதீர்கள். சிலர் முழு சீரியலையும் இங்கே பதிவிடுகின்றனர். இதனால் சீரியலின் டிஆர்பி மோசமாக பாதிப்புக்கு உள்ளாகிறது.“ராஜ பார்வை சீரியல் ரசிகர்களுக்கும், ஃபேன் பேஜ் அட்மின்களுக்கும் என் வேண்டுகோள். சீரியல் எபிசோடின் வீடியோ க்ளிப்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடாதீர்கள். சிலர் முழு சீரியலையும் இங்கே பதிவிடுகின்றனர். இதனால் சீரியலின் டிஆர்பி மோசமாக பாதிப்புக்கு உள்ளாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement