ராஜா ராணி 2-வில் ஆல்யாவின் பெயர் இது தானா – ஆல்யா வெளியிட்ட புதிய ப்ரோமோ.

0
1524
rajarani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடிகள் நிஜ வாழ்விலும் காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் சஞ்சீவ் சமீபத்தில் தான் ஆல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு சஞ்சீவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்துவருகிறார். ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த தொடரில் சஞ்சீவிற்கு பதில் ‘திருமணம்’ சீரியல் நடிகர் சித்து நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இந்த சீரியலின் முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. இந்த தொடரின் ப்ரோமோவை பார்த்த போதே இந்த தொடருக்கும் ராஜா ராணி தொடருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல தான் தெரிந்தது. அதே போல இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இது ‘என் கணவர் என் தோழன்’ தொடர் போல உள்ளது என்று கமன்ட் செய்து வந்தனர். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது ‘என் கணவர் என் தோழன்’ தொடர்.

அந்த தொடரே இந்தியில் வெற்றியடைந்த ”தியா ஓர் பாதீ ஹம்’  என்ற தொடரின் ரீமேக் தான். தற்போது அதே கதையை மீண்டும் ரீ-மேக் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆல்யா. மேலும், இந்த தொடரில் ஆல்யாவின் பெயர் சந்தியாவாம். ”தியா ஓர் பாதீ ஹம்’ தொடரில் வந்த நாயகியின் பெயரும் சந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement