விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிக்கு இணையாக ஆண் தொகுப்பளர்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போதைய விஜய் டிவி தொகுப்பாளராக ரக்ஷனும் ஒருவர். தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷன் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார். ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார்.
விஜய் டிவி மூலம் தான் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், துல்கர் சல்மான் நடித்து உள்ள ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராக மாறி இருந்தார். கடந்த 13 ஆம் தேதி ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி காதலர் தின சிறப்பு எபிசோடாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் தங்களது வாழ்வில் நடந்த காதல் பற்றி கூறி வந்தனர். அப்போது ரக்ஷன் பேசிய போது பின்னர் கல்யாணம் லவ் மேரேஜ் தான் என்று கூறினார். ரக்ஷன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொன்னதை பார்த்து பலரும் காமெடிக்காக தான் என்று தான் பலரும் நினைத்தார்கள்.
இதையும் பாருங்க : 9 ஆண்டுகளுக்கு முன்னரே PSBB பள்ளயில் பலியான கைதி பட நடிகரின் 9 வயது மகன். மறக்கப்பட்ட சோக கதை.
இதையடுத்து தனது மனைவியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் முதன் முறையாக பதிவிட்டு இருந்தார் ரக்ஷன். ரக்ஷன் விஜய் டிவியில் ஜாக்லினுடன் ஆங்கரிங் பண்ண போது பலரும் அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்று கலாய்த்தனர். அப்போதும் தனக்கு திருமணம் ஆனதை ரக்ஷன் கூறியது இல்லை. அவ்வளவு ஏன் நடிகை சித்ராவுடன் ரக்ஷன் டேட்டிங் சென்றதாக கூட சித்ரா இறந்த போது சர்ச்சை கிளம்பியது அப்போது கூட தனக்கு திருமணமனமானதை சொல்லவில்லை ரக்ஷன்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரக்ஷன் ‘என் மனைவிக்கு மீடியாவில் முகம் காட்ட விருப்பம் இல்லை. அதனால் தான் நான் எந்த நிகழ்ச்சியிலும் அழைத்து வருவது இல்லை என்று கூறியிருந்தார். ரக்ஷனுக்கு மனைவி இருப்பதே இப்போதான் தான் தெரியவந்த நிலையில் தற்போது அவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறாராம். சமீபத்தில் ரக்ஷன், தனது அக்காவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.