நீண்ட வருடங்களுக்கு பின் தனது மனைவியுடன் வெளியில் சென்ற புகைப்படத்தை பதிவிட்ட ரக்ஷன்.

0
8994
Rakshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிக்கு இணையாக ஆண் தொகுப்பளர்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போதைய விஜய் டிவி தொகுப்பாளராக ரக்ஷனும் ஒருவர். தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷன் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார். ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார்.

-விளம்பரம்-

விஜய் டிவி மூலம் தான் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், துல்கர் சல்மான் நடித்து உள்ள ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராக மாறி இருந்தார். கடந்த 13 ஆம் தேதி ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி காதலர் தின சிறப்பு எபிசோடாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் தங்களது வாழ்வில் நடந்த காதல் பற்றி கூறி வந்தனர். அப்போது ரக்ஷன் பேசிய போது பின்னர் கல்யாணம் லவ் மேரேஜ் தான் என்று கூறினார். ரக்ஷன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொன்னதை பார்த்து பலரும் காமெடிக்காக தான் என்று தான் பலரும் நினைத்தார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ரக்ஷன் முதன் முறையாக தனது மனைவியின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ரக்ஷன் விஜய் டிவியில் ஜாக்லினுடன் ஆங்கரிங் பண்ண போது பலரும் அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்று கலாய்த்தனர். அப்போதும் தனக்கு திருமணம் ஆனதை ரக்ஷன் கூறியது இல்லை. அவ்வளவு ஏன் நடிகை சித்ராவுடன் ரக்ஷன் டேட்டிங் சென்றதாக கூட சித்ரா இறந்த போது சர்ச்சை கிளம்பியது அப்போது கூட தனக்கு திருமணமனமானதை சொல்லவில்லை ரக்ஷன்.

This image has an empty alt attribute; its file name is 1-138-579x1024.jpg

இப்படி பல சர்ச்சைகளை சந்தித்த போதும் ரக்ஷன் திருமணம் ஆனதை ஏன் இத்தனை ஆண்டுகள் மறைத்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படி ஒரு நிலையில் தனது மனைவி இனியா குறித்து முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரக்ஷன், தினமும் ஸ்டேடஸில் எப்படி காதலிக்கிறோம் என்று சொல்வதை விட எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பதே உண்மையான காதலின் வெற்றி என்று பதிவிட்டுள்ளார் ரக்ஷன். ஆங்கர் ஆச்சே சமாளிக்க சொல்லிக்கொடுக்கணுமா என்ன ?

-விளம்பரம்-
Advertisement