மதுரை புத்தகத் திருவிழா சர்ச்சை, ராமர் பேசுகிறாரா இல்லையா? அவரே அளித்த விளக்கம் இதோ

0
333
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பல காமெடியன்கள் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ராமரும் ஒருவர். ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வசனத்தின் மூலம் தமிழக முழுவதும் பிரபலமானவர் ராமர். சமீபத்தில், ‘புத்தகத் திருவிழாவில் ராமர் பேசுகிறார்’ என்ற அறிவிப்பு வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளானது.

-விளம்பரம்-

மேலும், புத்தகத் திருவிழாவுல டிவியில் பேசுறவர் தான் கிடைச்சாரா? இவர் டபுள் மீனிங்ல பேசுவாரே. என்னென்ன பேச காத்திருக்கிறாரோ என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 14ஆம் தேதி ராமர் புத்தக கண்காட்சியில் பேசுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு மட்டும் யாருக்கும் பதில் தெரியவில்லை.

- Advertisement -

மதுரை சேர்ந்த பிரபலங்கள் கூறியது:

இது குறித்து மதுரையை சேர்ந்த பிரபலங்கள் கூறுகையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக இல்லை. அவர்கள் எடுத்த முடிவுகளில் அவர்கள் உறுதியாக இல்லை. சோசியல் மீடியாவில் கிண்டல் செய்வதால் அதுக்கேற்ற மாதிரி முடிவு எல்லாம் மாத்திக் கொண்டே இருக்க முடியாது. ராமர் மதுரைக்காரர். நகைச்சுவை மூலம் சின்னத்திரையில் நுழைந்து இப்போ நல்ல இடத்தில் இருக்கிறார்.

ராமர் குறித்து அவர்கள் சொன்னது:

மேலும், புத்தகத் திருவிழானா எழுத்தாளர்கள் மட்டும்தான் பேச வேண்டுமா. புத்தகத் திருவிழா நடக்கிறப்ப ஒவ்வொரு நாளும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை கூப்பிடாம யாரை கூப்பிட முடியும். அதேபோல் ஒரு விருந்தினரை அழைக்கிறதுக்கு முன்னாடி அவர் யார் என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொண்டு தானே கூப்பிடுகிறார்கள்? . அதற்குப் பிறகு எந்த விமர்சனங்கள் வந்தாலும், தங்களது முடிவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

ராமரின் பெயரை மறைக்கப்பட்ட புகைப்படங்கள்:

மேலும், ராமர் படிச்சிட்டு இருந்த காலம் தொட்டே புத்தகங்களை வாசிப்பார் என்று அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை ராமர் பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சில இடங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகளில் ராமர் பெயர் மறைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ராமர் கூறியது:

தற்போது இந்த சம்பவம் குறித்து ராமர், எனக்கு என்னை நீக்கியதாக எந்த தகவலும் சொல்லவில்லை. என்னை பொருத்தவரை நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கிறது. நான் பேசுகிறேன் என்று உறுதியாக கூறுகிறார். எனவே, நிகழ்ச்சியில் ராமர் பேசுவாரா இல்லையா என்பதை வரும் சனிக்கிழமை வரை பொறுத்து இருந்து பார்ப்போம். இதை அவருடைய ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்,’ என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement