பிரியங்காவிடம் விஜய் டிவியின் முன்னனி காமெடியின் நடந்த விதம் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
1466
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான்.

-விளம்பரம்-

அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் டிவியில் என்ன தான் பல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவியின் டிஆர்பிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருவது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான்.

- Advertisement -

அந்த வகையில் விஜய் டிவியில் ஏகப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட நிகழ்ச்சி ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா மாமா என்ற கேளிக்கை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் தான தொகுத்து வழங்கி வருகிறார்கள் இப்படி இருக்கையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாக இருந்தது.

இந்த ப்ரோமோவில் நிஷா மற்றும் ராமர் ஆகிய இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள் இந்த ப்ரோமோவில் பிரியங்கா கழுத்தில் ஒரு பூட்டு இருக்கும் செயின் ஒன்றை அணிந்து இருந்தார். அப்போது ராமர் அந்தப் பூட்டுக்கு சாவி என்னிடம் தான் இருக்கிறது என்று பிரியங்காவின் அருகில் சென்று அவரது முடியை விளக்கி அவரது கழுத்தில் கை வைத்தார். ராமரின் இந்த செயலைக் கண்டு பிரியங்காவும் ஒரு கணம் தர்ம சங்கடத்திற்கு ஆளானார்.இந்த ப்ரோமோ இணையத்தில் உயர்வாக பரவ இந்த பிரமுகர்களுக்கு ரசிகர்கள் பலரும் ராமரின் இந்து எல்லை மீறிய செயலை விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒரே வசனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் ராமர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் இவர் கலக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பெண் வேடம் அணிந்து வந்தால் தான் ரசிகர்கள் இவரை பெரிதும் விரும்புவர். இவரது பிரபலத்தை வைத்து ராமர் வீடு என்று ஒரு தனி நிகழ்ச்சியே நடத்தியது விஜய் டிவி.

தற்போது ராமர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு எல்லா நிகழ்ச்சியிலும் ராமர் பங்கேற்று வருகிறார். சின்னத்திரையின் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தனது சொந்த ஊரில் கிராம நிர்வாக அலுவலராகவும் பணியாற்றி வருகிறார் என்பது பலர் அறிந்திராத உண்மை.

Advertisement