ராஷ்மிகா ஆடி பாத்தீங்க யாஷிகா ஆடி பாத்திங்க, ‘சாமி சாமி’ பாட்டுக்கு ராமர் ஆடியதை பாருங்க. வைரல் வீடியோ.

0
708
ramar
- Advertisement -

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

அதோடு இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதில் முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக ‘வாயா சாமி’ பாடல் வேற லெவல் ஹிட். ஒரிஜினல் பாடலை விட தமிழில் தான் இந்த பாடல் மாபெரும் ஹிட் அடித்தது.

- Advertisement -

வாயா சாமி பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி பாடி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புஷ்பா படம் வெளிவருவதற்கு முன்பே ராஸ்மிகாவின் வாயா சாமி பாடல் சோசியல் மீடியாவில் பயங்கரமானது. அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை வைத்து எல்லோரும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு இருந்தார்கள்.

புஸ்பா படத்தின் வாயா சாமி பாடல்:

ராமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி:

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் நடித்து வரும் பிரபலங்கள் பலரும் சேர்ந்து இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது வேற யாரும் இல்லைங்க நம்பர் ராமர் தான். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

சூப்பர் டாடி நிகழ்ச்சி:

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்றுதான் சொல்லணும். அந்த அளவிற்கு இவர் விஜய் டிவியில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும், இவர் பெயரை வைத்து விஜய் டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி இருந்தது. அதுவும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் டாடி என்ற நிகழ்ச்சியில் ராமர் பங்கேற்று வருகிறார்.

ராமர் நடனம் ஆடிய வீடியோ:

இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள் தன் குழந்தைகளுடன் கலந்துகொண்டு காமெடியாக நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ராமர் தன் மகளுடன் சேர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஜீவா, ராமர், ஈரோடு மகேஷ் என நிகழ்ச்சியில் பங்கேற்ற சில பிரபலங்கள் சேர்ந்து வாய்யா சாமி என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

Advertisement