நீச்சல் உடையில் அருவியில் குளு குளு குளியல் போட்ட விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீரஞ்சனி – வைரல் வீடியோ.

0
2506
sriranjini
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். செந்தில் ஸ்ரீஜா, சஞ்சீவ் -ப்ரீத்தி, சஞ்சீவ் – ஆல்யா இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி. சூரியன் எஃப்.எம்-ல் ஒரு வருடம் ஆர்.ஜேவாக வேலைபார்த்த பிறகு, புதுயுகம் ‘கேலி பாதி கிண்டல் பாதி’ நிகழ்ச்சியிலும் பிரபலமானவர் ஶ்ரீரஞ்சனி.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று வந்தார். கலக்க போவது நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீரஞ்சனி. கடந்த சில மாதங்களாக இவரை அந்த நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் ஸ்ரீரஞ்சனி கருவூட்றிருக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம்  2016-ம் ஆண்டு ஆண்டு நடைபெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீரஞ்சினிக்கு கடந்த 7-ஆம் திகதி ஸ்ரீரஞ்சனிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின்னர் இவரை எந்த சீரியலிலும் காண முடியவில்லை. இவரது கணவர் பார்கவ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘திருமதி ஹிட்லர்’ தொடரில் நடித்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரஞ்சனி அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் அருவியில் குளித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement