வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதெல்லாம் சரி தான். ஆனா – சின்னத்திரையில் இருக்கும் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை.

0
836
usha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த தேன்மொழி பிஏ என்ற தொடரின் மூலம் தனது நடிப்பினால் அனைவரிடமும் பாராட்டப் பெற்றவர் உஷா எலிசபெத். இவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த சித்தி-2 சீரியலிலும் இவர் நடித்திருந்தார். ஆனால், தற்போது சீரியல் வாய்ப்பு இல்லாமல் நடிகை உஷா எலிசபெத் தவித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் உஷா எலிசபெத் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப் பயணம் குறித்து கூறியிருந்தது, எனக்கு எதிர்பாராமல் அமைந்தது தான் நடிப்பு துறை.

-விளம்பரம்-

அதற்கு முன்னாடி நான் நிறைய வேலைகளை பார்த்து இருக்கிறேன். ரிசப்ஷனிஸ்ட்டாக, டீச்சராக இருந்திருக்கிறேன். பேபி சிட்டரா கூட இருந்திருக்கிறேன். இதுமட்டுமில்லாமல் அப்பளம், வடகம் செய்து விற்று இருக்கிறேன். குடும்ப தலைவியாகவும் இருந்திருக்கிறேன். இப்படி பல வேலைகள் செய்து இருக்கிறேன். சென்னைக்கு நாங்கள் வந்த போது எனக்கு என்று ஒரு வேலை தேவைப்பட்டது. இப்படி எதிர்பார்ப்பில் இருக்கும் போது எதிர்பாராமல் அமைந்ததது தான் நடிப்பு துறை. பின் நான் நடிப்பு துறையை தேர்ந்தெடுத்தேன். அதற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக என்னப்பா என்கூட பேசவே இல்லை. என் மாமியார் எனக்கு பயங்கர சப்போர்ட்.

- Advertisement -

நடிகை உஷா எலிசபெத் அளித்த பேட்டி:

கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் போது என் அப்பா டிவியில் நான் நடிப்பதை பார்ப்பார் என்று சொல்லுவார்கள். தொடர்ந்து புதுக்கவிதை சீரியலில் நடித்தேன். பின் பிரியமானவள் தொடர் எனக்கென தனி இடம் கொடுத்தது. ஆனால், கேரக்டர் போகப்போக குறைய ஆரம்பித்துவிட்டது. ரொம்ப ஸ்ட்ராங்காக இருந்த கதாபாத்திரம் நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இதனால் பொருளாதார ரீதியாக என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால் தான் நான் பிரியமானவள் தொடரில் இருந்து விலகிவிட்டேன். மேலும், 2017 இருந்து 2019 வரைக்கும் நான் வீட்டில் சும்மாவே இருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் அதிகபட்சம் 40 நாட்கள் தான் வேலை பார்த்திருப்பேன். பின் தேன்மொழி பிஏ ஒரு ரீ என்ட்ரி ஆக எனக்கு அமைந்தது.

உஷா எலிசபெத் தற்போதைய நிலைமை:

அந்த தொடர் என்னை அடுத்த லெவலுக்கு கூட்டிக் கொண்டு சென்றது. ஆனால், பலர் கேரக்டர் கிடைக்காமல் ரொம்பவே கஷ்டப்படுராங்க. நான் யாரையும் குறை சொல்லவில்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் மெம்பராக இருக்கிற ஒரு ஆர்ட்டிஸ்ட்கே இங்க நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வருவதில்லை. நான் நடித்த சித்தி 2 தொடரையும் எதுவுமே சொல்லாமல் முடித்துவிட்டார்கள். அதே மாதிரி வைதேகி காத்திருந்தாள் தொடரையும் திடீரென்று நிறுத்திவிட்டார்கள். ஒவ்வொரு பிராஜக்ட் கமிட் ஆகும்போது என்னை மாத்தணும்னு காஸ்ட்யூம் எல்லாம் ரெடி பண்ணி வைத்திருப்பேன். திடீரென்று நிறுத்தவும் அதற்கான செலவு மொத்தமும் வீண் போய்விடும். வைதேகி காத்திருந்தாள் சீரியல் தரப்பில் எனக்கு சம்பள பாக்கி கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் தர வேண்டி இருக்கு. எனக்கு அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

நடிகை சபர்ணாவுக்கு நடந்தது:

மேலும், நான் அதிகபட்சமான மன அழுத்தத்தில் இருக்கும் போது இரண்டு விஷயம் பண்ணுவேன். ஒன்று நல்லா சாப்பிடுவேன், இரண்டாவது என் மனதில் தோன்றும் விசயங்களை பதிவு பண்ணி அந்த பதிவுக்கு என் ரசிகர்கள் சொல்ற பதிலை ஆறுதலாக எடுத்துப்பேன். வெள்ளித்திரை, சின்னத்திரை எங்களுக்கு கை கொடுத்தால் நன்றாக இருக்கும். எனக்கு நடிகை சபர்ணா நல்ல பழக்கம். அவள் கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலை இல்லாமல் இருந்தார். சாப்பிடக் கூட வசதியில்லாத நிலையில் தான் இருந்திருந்தார். அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. முன்னாடி எல்லாம் ஆர்டிஸ் யாருன்னு மேனேஜரும் இயக்குனரும் தீர்மானிப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் ஒரு காலகட்டத்தில் டப்பிங் சீரியல் அதிகமாகி விட்டது. அந்த சமயம் டப்பிங் சீரியல் அதிகமாக இருந்தது. அதனால் வேண்டாம் என்று நாங்கள் எல்லோரும் போராட்டம் பண்ணினோம்.

சின்னத்திரை நடிகைகளின் நிலை:

இப்ப டப்பிங் சீரியல் குறைந்து வெளியில் உள்ள ஆர்ட்டிஸ்ட்களை கூட்டிட்டு வருகிறார்கள். இதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இங்கே இருக்கிற தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று தான் சொல்கிறோம். இதுதான் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது சரி தான். ஆனால், இங்கேயே பிறந்து வளர்ந்து சாதிக்க வேண்டும் என்கிற ஆசையோடு நடிப்புத் துறைக்குள் வருபவர்களை ஒதுக்கி வைக்கிறது எந்த வகையில் நியாயம்? இத்தனை சீரியல் பண்ணியிருக்கிறேன். பெரிய பெரிய நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து இருக்கிறேன். எனக்கு இன்னும் எந்த வாய்ப்பும் வரவில்லை என்று மனவேதனையுடன் பேட்டி அளித்திருக்கிறார்.

Advertisement