பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல், பாக்கியலட்சுமி முதல் – விஜய் டிவியின் ஹிட் சீரியலுக்கு முக்கிய காரணமாக இருக்கும் இவர் யார் தெரியுமா ?

0
1633
Priya
- Advertisement -

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சீரியல்கள். அதிலும் சமீப காலமாகவே ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் மௌன ராகம், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதிதாசன் காலனி போன்ற தொடர்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. இந்த சீரியல்களின் கதாசிரியர் வேற யாரும் இல்லைங்க பிரியா தம்பி தான்.

-விளம்பரம்-

இவரை மக்கள் எல்லோரும் Starbucks akka என்று தான் அழைக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ப்ரியா தம்பி அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சீரியல் பயணம் குறித்து கூறியிருந்தது, என்னுடைய சீரியல் வாழ்க்கை தொடங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டது. பலரும் என்னுடைய சீரியலை குறித்து வாவ், சூப்பர், எப்படி எழுதுகிறீர்கள் என்றெல்லாம் பாராட்டுவார்கள். இன்னும் சிலர், சீரியல்லா எழுதுறீங்க? ஏன் இப்படி பண்றீங்க? என்றெல்லாம் விமர்சனமும் வந்திருக்கிறது. இதையெல்லாம் கடந்து தான் நான் பத்து வருடங்களாக பயணித்து வருகின்றேன்.

- Advertisement -

ஒரு மெகா சீரியல் எழுத்தாளர் ஆனது என்பது எல்லோரும் சொல்வது போல் விபத்தாக நடக்கவில்லை. நான் சிங்கிள் பேரண்ட். என்னுடைய மகளின் இரண்டு வயதிலிருந்தே சீரியலில் பயணித்து வருகிறேன். ஆரம்பத்தில் நான் பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவளோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதினால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடிவு செய்தேன். அப்போதுதான் சீரியல்களில் வசனம் எழுத வாய்ப்பு வந்தது. இயக்குனர் திருச்செல்வத்தின் பொக்கிஷம் என்ற சீரியலில் தான் வசனம் எழுத தொடங்கினேன்.

அதன் பின் விஜய் டிவியில் தர்மயுத்தம் என்ற சீரியலில் வசனம் எழுதினேன். ஆனால், அந்த சீரியல் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. அதன் பிறகு ரமணகிரிவாசன் என்பவரின் மூலமாகத் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ், 7பி போன்ற சீரியல்களில் வசனம் எழுதினேன். பொதுவாகவே பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட மெகா சீரியல்கள் எல்லாம் ஆண்கள் தான் ஆதிக்கம் செய்திருந்தார்கள். இப்போதுதான் பெண்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். நான் சீரியலில் வசனம் எழுத தான் வந்தேன். அதனால் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கான காட்சிகளை முந்தைய நாள் இரவு தான் தருவாங்க.

-விளம்பரம்-

அதனால் இரவு நேரங்களில் வசனம் எழுதுவேன். அடுத்த நாள் காலையில் குழந்தை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், சமையல், வீட்டு வேலை என்று தூங்கவே முடியாது. இப்படியே என்னுடைய வாழ்க்கை சென்றது. பின் எனக்கு இந்த வாழ்க்கையை போரடித்து விட்டது. என் மகள் ஒன்பதாம் வகுப்பு சென்றாள். நான் பத்திரிக்கைக்கு வேலைக்கு சென்றேன். அதில் நான் பேசாத பேச்செல்லாம் என்ற தொடர் எழுதினேன். அந்த தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பலரும் வேற பாராட்டி இருந்தார்கள். அதற்கு பிறகு தான் பெண்களின் வாழ்க்கை மையமாக வைத்து சீரியல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.

அதற்கு பிறகு தான் விஜய் டிவியில் வாய்ப்பு வந்தது. நான் முதன்முதலில் விஜய் டிவியில் திரைக்கதை, வசனம் எழுதிய தொடர் மௌன ராகம். இந்த தொடர் சூப்பர்ஹிட்ரது. ஆனால், அது பெங்காலி கலைத் தழுவிய ஒரு கதை. அதன்பின் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என்ற தொடர்களை என்னை நம்பி கொடுத்தார்கள். இதுதான் எனக்கான காலம் என நினைத்தேன். பெண்கள் என்றாலே பழி வாங்குபவர்கள், மாமியார்- மருமகள் சண்டை என்ற நெகட்டிவ் கருத்துக்களை இல்லாமல் இந்த இரண்டு சீரியலுமே இன்று வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. இயல்பான குடும்பங்களை, இயல்பான பெண்களை காண்பித்தும் வெற்றி அடைய முடியும் என்பதை இந்த சீரியல்கள் நிரம்பிவிட்டது. இன்னும் பெண்கள் வரவேண்டும். திறமையோடு இருப்பவர்களை தொலைக்காட்சி நிச்சயம் அங்கீகரிக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement