கணவருடன் விவாகரத்து, பொன்மகள் வந்தாள் சீரியல் நடிகைக்கு உடன் நடித்த திருமணமான நடிகருடன் இரண்டாம் திருமணமா?

0
12080
megna

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் ‘தெய்வம் தந்த வீடு’ தொடரும் ஒன்று.2013 ஆம் ஆண்டு துவங்கிய 2017 வரை ஒளிபரப்பானது. ரசிகர்களின் ஆதரவால் இந்த தொடர் 992 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த சீரியலில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்சென்ட்.

meghna vincent divorce
தனது முதல் கணவருடன் மேக்னா

மலையாள மொழி மூலம் தான் இவர் சின்னத்திரை சீரியலுக்கு அறிமுகமானார். பின் இவர் மலையாளத்தில் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் சூர்யா டிவியில் மோகக்கடல், சக்ரவாகம், ஏசியாநெட்டில் ஆட்டோகிராஃப், மழவில் மனோரமா சேனலில் பரினாயம், இந்திரா என எல்லா சேனல்களிலும் ஒரு கலக்கு கலக்கினார். அதற்கு பிறகு தான் நடிகை மேக்னா அவர்கள் தமிழில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானார்.

- Advertisement -

‘தெய்வம் தந்த வீடு’ சீரியலுக்கு பின்னர் தமிழில் பொன்மகள் வந்தால், அவளும் நானும் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.அவளும் நானும் சீரியலுக்கு பின்னர் இவரை வேறு எந்த தமிழ் சீரியலிலும் காணமுடியவில்லை. மேலும், மலையாளத்திலும் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை நடிகை மேக்னா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Ponmagal Vanthaal - Watch Episode 136 - Rohini, Gautham Plan an ...
பொன்மகள் வந்தாள் சீரியலில் விக்கி மற்றும் மேக்னா

இந்த நிலையில் நடிகை மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். . நடிகை மேக்னா, திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்து தனியாக தான் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை மேக்னா நடித்த தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்த விக்கு என்பவருக்கும் விரைவில் இரண்டாம் திருமணம் நடைபெற போகிறது என்ற ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Vani Rani Sun Tv- Gowtham "Vicky Krish" - Home | Facebook
தனது மனைவியுடன் விக்கி

பொன்மகள் வந்தால் சீரியலில் நடித்த விக்கி, வாணி ராணி தொடரில் தன்னுடன் நடித்த ஹரிப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், மேக்னா எப்படி திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்தாரோ விக்கியின் தனிப்பட்ட மணவாழ்க்கை கசந்துவிட்டதாகவும், அதனால் விக்கி மற்றும் மேக்னா இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும் கடந்த ஆண்டே கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து இருவருமே எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்ல.

Advertisement