`கண்ணான கண்ணே’ பாடலால் தொடங்கிய காதல், திருமணத்தை முடித்த விஜய் டிவியின் உதித் நாராயணன் அஜய்.

0
193
- Advertisement -

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவின் திருமணம் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்த்து முடிந்து இருக்கிறது. திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஒன்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-
ajay

சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பலமுறை வியக்க வைத்திருக்கிறார். அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார்.

- Advertisement -

அஜய் கிருஷ்ணா பற்றிய தகவல்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு படங்களில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பின் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பாடல்களை பாடி வருகிறார். அஜய் கிருஷ்ணா தற்போது பின்னணி பாடகராக திகழ்கிறார். இந்நிலையில் இன்று அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

அஜய்-ஜெஸி காதல்:

கண்ணான கண்ணே பாடலை அஜய் பாடின வீடியோவை பார்த்து அவரிடம் பேச ஆரம்பித்தவர் தான் ஜெஸ்ஸி. ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர்களுடைய உறவு பின் நாளடைவில் காதல் மலர்ந்தது. பிறகு இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள். சமீபத்தில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக முடிந்து இருந்தது. மேலும், திருமண வேலைகள் முழுவதையுமே ஆசை ஆசையாக இருவருமே கவனித்து சிறப்பாக தங்களுடைய திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அஜய் அளித்த பேட்டி:

இவர்களுடைய காதல் இன்று கல்யாணத்தில் முடிந்து இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து அஜய் கிருஷ்ணா கூறியிருப்பது, என் மூன்று அக்காக்கள் என்னை ரொம்ப அன்பா பார்ப்பார்கள். அதே மாதிரி ஜெஸியும் என்னை கவனித்து கொள்கிறாள். எங்க அக்காவுக்கு நீளமான முடி இருக்கும். இப்ப நீளம் எல்லாம் குறைந்து விட்டது. ஆனால், அவர்களுக்கும் எனக்கு வர மனைவிக்கு நீளமான முடி இருக்கணும்னு ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அதேபோல் ஜெசிக்கு ரொம்பவே நீளமான முடி. அதுவும் அவங்க கிட்ட எனக்கு ரொம்பவே பிடித்தது.

இந்து-கிறிஸ்டின் முறைப்படி திருமணம்:

நெருங்கிய சொந்தங்களுடன் எளிமையான முறையில் எங்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், இன்று எங்களுடைய திருமணத்தில் மீடியா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். நான் இந்து, ஜெஸ்ஸி கிறிஸ்டின் என்பதால் இரு மத முறைப்படியும் எங்களுடைய திருமணம் நடைபெற்றது என்று கூறியிருக்கிறார். மேலும், இவருடைய திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜய்-ஜெசிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement