பிக் பாஸால் தேன்மொழி சீரியலுக்கு எண்டு கார்டு – ஜாலியாக ஜாக்லின் கொடுத்துள்ள விளக்கம்.

0
3192
jackline
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன் மொழி சீரியல் விரைவில் நிறைவடைய இருக்கும் நிலையில் இது குறித்து நடிகை ஜாக்லின் ஜாலியாக கூறியுள்ளார். கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார். கோலமாவு கோகிலா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற ஒரு சில படங்களில் நடித்த ஜாக்லின் ‘தேன்மொழி’ தொடரில் நாயகியாக நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : ராஜா ராணி அர்ச்சனாவின் அக்காவை பார்த்துள்ளீர்களா ? அச்சலா அவர மாதிரியே இருக்காரே.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விரைவில் பிக் பாஸ் துவங்க இருப்பதால் இந்த தொடருக்கு எண்டு கார்டு போட்டுவிட்டனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜாக்லின், போன வருடம் கோடு போட்டார்கள், இந்த வருடம் ரோடு போட்டு அனுப்பி விட்டார்கள். அதனால் பிஏ வரைக்கும் படித்தது போதும் என்று நானும் மனசை தேற்றிக் கொண்டேன் என்று ஜாலியாக கூறியிருக்கிறார் ஜாக்லின்.

கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் பிக் பாஸ் 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒளிபரப்பான போது தேன்மொழி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவில்லை. பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டது. கொரோனா லாக்டவுன் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும். இந்த தொடர் மற்ற சீரியல்கள் அளவிற்கு விஜய் டிவிக்கு கைகொடுக்கவில்லை என்பதே உண்மை என்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement