புதிய சீரியலின் வரவால் முடிவுக்கு வந்த விஜய் டிவியின் முக்கிய சீரியல் – ரசிகர்கள் வருத்தம்.

0
3118
rajaparvai
- Advertisement -

சில வருடங்களாகவே தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெள்ளித்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு சமமாக சின்னத்திரை நடிகர்களையும் மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு சேனல்களும் தங்களுடைய டிஆர்பி ரேட்டை அதிகப்படுத்த புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்புகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுகிறது. விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
vinoth-babu

கொரோனா பிரச்சனை காரணமாக இடையில் பல்வேறு சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சில பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது. அதே போல ஒரு சில சீரியல்களை திடீரென்று நிறுத்தியது சில சேனல். சமீபத்தில் மௌன ராகம் சீரியல் நிறைவடைய போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்டது.

இதையும் பாருங்க : என்னை மீட்டு கொண்டு வந்த ராக்ஸ்டார் – விஜய் சேதுபதிக்கு நன்றி மறக்காமல் லோகேஷ் செய்த விஷயம்.

- Advertisement -

அதே போல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகினர். இப்படி ஒரு நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நிறைவடைய இருக்கிறது. இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்து வந்தனர். இந்த சீரியலுக்கு எதிர்பார்த்தபடி ஆதரவு கிடைக்கவில்லை இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய இருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியல் குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், விரைவில் துவங்க இருக்கும் ராஜ பார்வை சீரியலால் தான் இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement