ஆபாச வீடியோ அனுப்பிய நபர் – சூப்பர் சிங்கர் திவ்யா வெளியிட்ட ஷாக்கிங் ஆதாராம்.

0
1118
Divya
- Advertisement -

இன்ஸ்டாகிராமில் தமக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் குறித்து பிரபல சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி திவ்யா சில அதிர்ச்சியான ஸ்க்ரீன் ஷாட்டுகளை பகிர்ந்து உள்ளார். சில காலங்களாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மத்தியில் மிக பெரிய பெரிய அளவில் வரவேற்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் திவ்யா. பின்னர் மலையாள மொழியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகியும் ஆவார்.

- Advertisement -

மேலும், இவர் வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை, ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். அதோடு தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பாடி உள்ளார். சமீப வருடமாக தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த திவ்யா, கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோ அனுப்பிய நபர் ஒருவர் குறித்து அதிர்ச்சியான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கும் திவ்யா, சமீபத்தில் ஒரு நபர் விளம்பரம் செய்வதற்காக தன்னை தொடர்பு கொண்டதாகவும் ஆனால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து மெயில் அனுப்ப கேட்டதாகவும் கூறியுள்ளார்.அதனை மறுத்த அந்த நபர், அந்தரங்க உறுப்பை வீடியோ எடுத்து தமக்கு அனுப்பி இது எப்படி திருப்தியாக இருக்கிறதா என்று கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற கேவலமானவர்களை சும்மா விடக்கூடாது என்றும் இந்த கேவலமான நபர் யார் என்று தெரிந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement