பீஸ்ட் படத்தை கலாய்த்து விஜய் டிவி வெளியிட்ட வீடியோ, விழுந்து விழுந்து சிரிக்கும் நடிகர்கள் – (பீஸ்ட்க்கு வந்த சோதனை)

0
711
- Advertisement -

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை கலாய்த்து விஜய் டிவி வெளியிட்ட காமெடி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இது நெல்சன் திலீப் குமாரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் பீஸ்ட் படம் இன்று வெளியாகி உள்ளது. படத்தில் தீவிரவாத கும்பல் மால் ஒன்றை ஹைஜாக் செய்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அந்த மாலில் விஜய் இருக்கிறார். பின் அந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் மக்களை எப்படி காப்பாற்றுகிறார்? என்பது தான் படத்தின் மீதி கதை. வழக்கம் போல் விஜய் தன்னுடைய அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்சன் காட்சிகள் என ஒட்டு மொத்தமாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

சொல்லப்போனால் மொத்த படத்தையும் விஜய் தான் தாங்கி நிற்கிறார் என்று சொல்லலாம். மேலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் படம் திருப்தியாக உள்ளது என்றும் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்று மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் கழித்து விஜய் தனது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி உள்ளார் என்றும் கூறிவருகின்றனர்.

விஜய் டிவி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்:

ஆகமொத்தம் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் பீஸ்ட் படத்தின் டிரைலரை விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலாய்க்கும் விதமாக ஸ்பூப் செய்து வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் தற்போது புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் ரியாலிட்டி ஷோக்களை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

-விளம்பரம்-

பீஸ்ட் படத்தை கிண்டல் செய்த வீடியோ:

அதிலும் அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், படங்கள் குறித்து பல விமர்சனங்கள் செய்து வருகின்றனர்கள். இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தை கலாய்த்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், பீஸ்ட் படத்தில் ட்ரைலரில் விஜய் காவி திரையை கிழித்து என்றி கொடுப்பார். அதன் பின் மற்றொரு காட்சியில் துப்பாக்கி வைத்துக் கொண்டு விஜய் தீவிரவாதிகளை சுடுவது போல வந்திருக்கும். அதை அப்படியே காமெடி நடிகர் ராமர் கலாய்த்து நடித்து காட்டி இருக்கிறார்.

வைரலாகும் காமெடி வீடியோ:

அந்த காமெடியை பார்த்து விஜய் டிவி நடிகர், நடிகைகள் விழுந்து விழுந்து சிரிக்கின்றன. இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. படம் ரிலீசான முதல் நாளிலேயே விஜய் படத்தை கிண்டல் கேலி செய்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு விஜய் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து என்ன பதில் வர போகிறது? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement