வறுமையில் வாடும் வடிவேல் பாலஜியின் குடும்பம்- தற்போதைய நிலை என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ

0
459
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது, கலக்கப்போவது யாரு, ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி 10 sep 2020 அன்று திடீரென உடல் நலக் குறைவால் காலமானார். வடிவேல் பாலஜியின் திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தியாக இருந்தது. வடிவேல் பாலஜியின் மரணம் அவர் உடன் பணியாற்றிய அனைவரையும் சோகத்தில் ஆழ்தியது.

-விளம்பரம்-

வடிவேல் பாலாஜி இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு உடல்நலகுறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. ஸ்டோரக் வந்து இரண்டு கைகளும் செயல் இழந்த நிலையில் தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் சிகிச்சைக்கு பணம் இன்றி கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரது குடும்பம் அதிகம் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.விஜய் டிவி பிரபலங்களும் கூட பலரும் சிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

வடிவேல் பாலாஜி மரணம் :

அதன் பின் மூன்று மருத்துவமனைகளுக்கு இவர் மாற்றப்பட்டு உடல் மோசமாக நலிவனைந்துள்ளார். உடலில் உள்ள உறுப்புகள் வேலை செய்யாமல் அதன் பின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு 10 sep 2020 அன்று மரணம் அடைந்தார். கொரோனா காரணமாக இவருக்கு சிகிச்சை முறையாக அளிக்கவில்லை சரியாக பெட் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். வடிவேல் பாலாஜி மரணத்திற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு தேவையான நேரத்தில் அவரால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியவில்லை என்பது தான். கொரோனா காரணமாக டிவி நிகழ்ச்சி எதுவும் நடக்காத காரணத்தால் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.

கணவனின் பாதையில் பயணிக்கும் மனைவி :

வடிவேல் பாலாஜியின் கொள்கையை அப்படியே பின்பற்றும் அவரது மனைவி. வடிவேல் பாலாஜி மரணத்திற்கு முன்பு அவருக்கு மருத்துவ உதவி,பண உதவி அனைத்துமே தேவைப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றிய யாரிடமும் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. தன்னை பார்த்து சிரித்த யாரும் கண்கலங்க கூடாது என்று சிந்தித்தார். மாறாக அனைவரையும் சிரிக்க வைக்க மட்டுமே செய்தார். அவர் யாரிடமும் உதவி கேட்பதற்கும் தயாராக இல்லை.

-விளம்பரம்-

வடிவேல் பாலாஜி மனைவி அளித்த பேட்டி:

தற்போது அவர் மனைவியும் அவரைப் போல் தான் பிரபல யூடியூப் சேனல் ஒன்று நடிகர் வடிவேல் பாலாஜியின் வீட்டிற்கு சென்று அவர் மனைவியை சந்தித்து தங்களுக்கு எதுவும் உதவி தேவைப்படுகிறதா உங்கள் குடும்பத்தின் நிலை தற்போது என்ன என்று அவர்கள் விசாரித்த போது. பொருளாதார ரீதியாக இப்போது மிகவும் கஷ்டப்படும் வடிவேல் பாலாஜியின் மனைவி தாங்கள் நலமாக உள்ளதாகவும். தங்களுக்கு உதவி தேவை இல்லை என்பதாகவும் தெரிவித்தார்.

வடிவேல் பாலாஜி குடும்பத்தின் நிலை :

வடிவேல் பாலஜியின் மனைவி என்னதான் நலமாக உள்ளோம் உதவி வேண்டாம் என்று கூறினாலும் . பிரபல யூடியூப் சேனல் அவரது உறவினர்களிடம், அக்கம் பக்கத்தில் அவர்களிடம் விசாரிக்கும் போது வடிவேல் பாலாஜி மனைவி பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாகவும் சாப்பாட்டிற்கே திண்டாடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வடிவேல் பாலாஜியின் மனைவி மேலும் குடும்பத்தை நடத்துவதற்காக வெளியில் வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர்களது அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

Advertisement