இந்த பிறந்தநாளில் இருந்து சிலம்ப பயிற்சியை ஆரம்பித்த ரம்யா – என்னமா சுத்தறாங்கபா.

0
657
ramya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார் விஜே ரம்யா. பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். இவர் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்றவர். இவர் முதன் முதலாக விஜேவாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ரம்யா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம். அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் சொல்லவா வேண்டும். எப்போதும் தன்னுடைய ஃபிட்னஸ் விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார்.

இதனால் அடிக்கடி யோகா, உடற்பயிச்சிகளை செய்து வீடியோக்களை பதிவிட்டு வருவார் ரம்யா. ஆனால், தற்போது வித்யாசமாக சிலம்பாட்ட பயிற்சயில் இறங்கியுள்ளாராம் ரம்யா. சமீபத்தில் இவர் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் தான் ரம்யாவின் பிறந்தநாள் சென்றது, ஒருவேளை இந்த பிறந்தநாள் ரெசலுயூஷனாக சிலம்பம் கற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளாரோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement