ரெண்டு வாரத்தில் 2 இன்ச் கொறச்சிட்டேன் – ரம்யா பகிர்ந்த புகைப்படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள். நீங்களே பாருங்க ஏன்னு ?

0
1643
ramya
- Advertisement -

தற்போது உள்ள சினிமா துறையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி நடிகர்கள் என்றால் சிக்ஸ் பேக் நடிகைகள் என்றால் ஒல்லியான உடல், இது தான் தற்போதய நிலை. அதிலும் ஒல்லியாக இருக்கும் பல்வேறு நடிகைகளும் ஜீரோ சைஸை அடைய கடுமையாக உடற்பயற்சி செய்து வருகின்றனர். இதில் தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யாவும் விதிவிலக்கல்ல. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் டிவியில் பிரபலமானது ரம்யா தான். இவருக்கு பின்னர் தான் பாவனா, பிரியங்கா எல்லாம் வந்தார்கள்.

-விளம்பரம்-

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : இதனால் தான் உங்களை வெறுக்கிறோம். இதுக்கா உங்களுக்கு ஓட்டு போட்டோம்னு அசிங்கமா இருக்கு – சனம் வெளியிட்ட வீடியோவால் கடுப்பான ரசிகர்.

- Advertisement -

அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ரம்யா, தற்போது இளைய தளபதி நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார் ரம்யா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதவிடுபவது வழக்கம். மேலும், இவர் பெருமபாலும் பிட்னஸ் பற்றிய விஷயங்களை தான் பதிவிட்டு வருகிறார்.

மேலும், இவர் பிட்னசுக்கு என்றே யூடுயூ சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே படு பிட்டாக இருக்கும் ரம்யா சமீபத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் அதில், வெறும் 4 வாரத்தில் 2.5 கிலோ மற்றும் 2 இன்ச் உடலை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ரம்யா வின் இந்த Transfirmation – ஐ பார்த்து சிலர் வியந்து போனாலும், பெரும்பாலோனோர் முன்பு இருந்ததற்கு இப்போது இருந்ததற்கு எந்த வித்தியாசமும் இல்லை. ட்ரெஸ்ஸ மாத்தி ஏமாத்துலத்துறீங்களா என்று பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், ஒரு சிலரரோ இதற்கு மேல் உடலை குறைக்க வேண்டாம் இதுவே பார்க்க நன்றாக இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர். ரம்யாவின் இந்த தோற்றம் நெடிசங்களின் கேலிக்கு பலியாகி விட்டது. ஆனால், ரம்யா விரைவில் நன்றாக சாப்பிட்டு உடலை ஏற்றப்போவதாகவும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement