இதனால் தான் உங்களை வெறுக்கிறோம். இதுக்கா உங்களுக்கு ஓட்டு போட்டோம்னு அசிங்கமா இருக்கு – சனம் வெளியிட்ட வீடியோவால் கடுப்பான ரசிகர்.

0
5133
sanam
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். அதே போல மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

- Advertisement -

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல்வேறு பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை.

இப்படி ஒரு நிலையில் நடிகை சனம் ஷெட்டி, வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் தின வாழ்த்தை சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டார் மேலும், அந்த வீடியோவில் ஒரு அழகு சாதன பொருளை விளம்பரம் செய்தார் சனம். இதை கண்ட ரசிகர் ஒருவர், இதனால் தான் உங்களை நாங்கள் வெறுகிறோம். உங்களுக்கு வாக்களித்தது நீங்கள் ஒரு மாற்றத்திற்காக நிற்பீர்கள் என்று தான்.

-விளம்பரம்-

ஆனால் , இன்னமும் சில பொருட்களை விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். எங்களுக்கு தான் அசிங்கம் என்று பதிவிட்டு இருந்தார்.ரசிகரின் இந்த பதிவிற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, உங்கள் ஆதரவிற்கும் வாக்குகளுக்கும் நன்றி. நான் இவர்களின் ஒரு சில பொருட்களை பயன்படுத்தினேன். அது எனக்கு பிடித்து இருந்தது. குறிப்பாக உள்ளூர் ஆதாரங்களுக்கு அவர்கள் கொண்டுள்ள தொழில் தர்மத்தை நான் மதிக்கிறேன். இது தான் நான் ப்ரோமோஷன் செய்ய முக்கிய காரணம் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement