விஜய்யின் முதல் அரசியல் மாநாடு எங்கு? எப்போது தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள் – வெளியான அதிரடி அப்டேட்

0
305
- Advertisement -

தமிழ்நாட்டின் என்றென்றும் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை அடைந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் விஜய் அவர்கள் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கூறியிருந்தார். இதற்காக புதிய செயலியும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

அதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். அதற்குப் பின் கடந்த மாதம் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் வகையில் கல்வி விழா ஏற்பாடு செய்திருந்தார்.

கல்வி விருது விழா:

இந்த விழாவை இரண்டு கட்டமாக விஜய் நடத்தி மாணவர்களுடன் கலந்துரையாடி பரிசும் அளித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை அடுத்து விஜயின் உடைய முதல் அரசியல் மாநாடு எப்போது? என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயின் முதல் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தான் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு செப்டம்பர் மாதம் இந்த மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

விஜய் மாநாடு குறித்த தகவல்:

இதற்கான வேலையில் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று மாலை அந்தப் பகுதியில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் மாநாட்டை திருச்சி மற்றும் மதுரையில் தொடங்குவது தான் வழக்கம். அரசியல் ரீதியாக அதை ஒரு முக்கிய இடமாகவும் கருதுகிறார்கள். அந்த வகையில் விஜயும் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் தொடங்க இருக்கிறார்.

விஜய் திரைப்பயணம்:

மேலும், இந்த மாநாட்டில் விஜய் என்ன சொல்லப் போகிறார்? மாநாடு எப்போது நடைபெறும்? என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் ‘தளபதி 69’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது.

Advertisement