புல்லாங்குழல்,பிஞ்சி முகம். இதுவரை காணாத விஜய்யின் சிறு வயது புகைப்படம்.

0
875
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நடைபெற்றது. இந்த படம் இம்மாதம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் படத்தின் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொரோனாவினால் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை இன்னும் 10, 15 நாள் என்று நீட்டித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் என்ன நடக்குமோ?? இந்த ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

View image on Twitter

எப்போது தான் இந்த பிரச்சனை முடிந்து பழையபடி மக்களின் இயல்பு வாழ்க்கை மாறுமோ?? என்பதில் மக்கள் கவலையாக உள்ளார்கள். இந்த பஞ்சாயத்துக்கு நடுவே விஜய்யின் throwback புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.அதில் கையில் புல்லாங்குழலுடன் படு குயூட்டாக இருக்கிறார் விஜய். இதோ அந்த புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement