சிறு வயதிலேயே பெண் வேடம் போட்டுள்ள விஜய்- அரிய புகைப்படம்.

0
3209
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விட்டது. அதோடு பிகில் படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்திருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் விஜய் அவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் அது. விஜய் அவர்கள் படங்களில் பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. செல்வபாரதி இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த பிரியமானவளே படத்தில் பெண் வேடமணிந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதே போல் பாபு சிவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் படத்திலும் ஒரு பாடலுக்கு பெண் வேடம் அணிந்து நடனம் ஆடி இருப்பார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய சிறு வயதிலேயே பெண் வேடம் அணிந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி படத்தில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement